இலவச மின்சாரம் ரத்து: நாளை விவசாயிகள் கறுப்பு கொடி போராட்டம்
மதுரை:
இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து விவசாயிகளும், எதிர்க் கட்சியினரும் நாளைதமிழகம் முழுவதும் கறுப்புக் கொடி போராட்டம் நடத்தவுள்ளனர்.
மின் கட்டண உயர்த்தப்பட்டது மற்றும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டது ஆகியவற்றைக்கண்டித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன்படி நாளை விவசாய சங்கத்தினரும், எதிர்க் கட்சியினரும் சேர்ந்து கறுப்புக் கொடிபோராட்டத்தை நடத்த உள்ளனர். இது தொடர்பாக தமிழக விவசாயிகள் சங்கங்களின் பேரவைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் மற்றும் செயலாளர் துரைமாணிக்கம் ஆகிய இருவரும் இன்றுமதுரையில் நிருபர்களிடம் கூறுகையில்,
கடந்த 13 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை தமிழக அரசு திடீரென்று ரத்துசெய்துள்ளது. இதனால் ஏற்கனவே துன்பத்தில் உள்ள விவசாயிகள் மேலும் கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.2,400 கோடி வரை மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது தமிழகஅரசு. இதுவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தவிர, தமிழகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக ரூ.1,000 வரை மானியம்அளிக்கப்படுவதாகக் கூறி தமிழக அரசு ஏமாற்றி வருகிறது. ஆனால் அரசு விழாக்கள் என்றபோர்வையில் கோடிக்கணக்கான பணத்தை தமிழக அரசு வீணடித்து வருகிறது.
எனவே இவை அனைத்தையும் கண்டித்து நாளை கறுப்புக் கொடி போராட்டம் நடத்த உள்ளோம்.தமிழகத்தில் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்துஇப்போராட்டத்தை நடத்துகின்றன என்று ராமலிங்கமும் துரைமாணிக்கமும் தெரிவித்தனர்.
இந்தப் போராட்டத்தில் திமுக தொண்டர்கள் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று அக்கட்சித்தலைவர் கருணாநிதி ஏற்கனவே கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆண் தொண்டர்கள் கறுப்புச் சட்டை அல்லது கறுப்புத் துண்டு ஆகியவற்றையும், பெண்தொண்டர்கள் கறுப்பு சேலை அல்லது வேறு ஏதாவது கறுப்பு உடையையும் அணிந்து கொண்டுபோராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தொண்டர்களும் இந்தக் கறுப்புக் கொடிப் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள்என்று அதன் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications