கள்ளத் தோணியில் இலங்கைக்கு தப்ப முயன்ற 20 தமிழ் அகதிகள் கைது

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

கள்ளத் தோணியில் இலங்கைக்குத் தப்பிச் செல்ல முயன்ற 20 தமிழ் அகதிகளைப் போலீசார் கைதுசெய்தனர்.

ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் போலீசார் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போதுகடற்கரையோரத்தில் உள்ள சவுக்குக் காட்டிற்குள் 20 பேர் மறைந்து நின்று கொண்டிருந்தனர்.

அவர்களைச் சுற்றி வளைத்த போலீசார் பின்னர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.அப்போதுதான் அவர்கள் அனைவரும் இலங்கைத் தமிழ் அகதிகள் என்பது தெரிய வந்தது.

அகதிகள் முகாமிலிருந்து எப்படியோ தப்பி கள்ளத் தோணி மூலம் இலங்கைக்குச் செல்வதற்காகசவுக்குக் காட்டிற்குள் மறைந்து கொண்டிருந்த விவரமும் தெரிய வந்தது.

அவர்களைக் கைது செய்த போலீசார் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைத்தனர்.

4 புதிய அகதிகள் வருகை:

இதற்கிடையே இலங்கையிலிருந்து புதிதாக 4 அகதிகள் ராமேஸ்வரத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர்.

நடுத்துறை பகுதி அருகே இலங்கையிலிருந்து வந்த படகிலிருந்து இறங்கி 4 பேரைப் போலீசார்பிடித்து விசாரித்தனர். அந்த 4 பேரும் இலங்கை-மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதெரிய வந்தது.

மோகன் என்பவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் சிகிச்சை அளிப்பதற்காக அவரைஅழைத்துக் கொண்டு வந்ததாக வனிதா, ராஜக்குமார் மற்றும் பிலோமினா ஆகிய 3 பேரும்போலீசாரிடம் தெரிவித்தனர்.

அவர்கள் 4 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களைப் படகில்அழைத்து வந்த படகோட்டியான சகாயநாதனையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த 4 பேரையும் இறக்கி விட்ட பின் மேலே குறிப்பிடப்பட்ட 20 அகதிகளையும் இலங்கைக்குஅழைத்துச் செல்ல சகாயநாதன் திட்டமிட்டிருந்ததும் அப்போது தெரிய வந்தது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+