சார்ஸ் நோயால் 13 வயது சிறுவன் சாவு?- ராஞ்சியில் பீதி
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் சார்ஸ் நோயால் இறந்து விட்டதாக செய்திகள்வெளியானதைத் தொடர்ந்து அங்கு பெரும் பீதி கிளம்பியுள்ளது.
காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல், கால் வலி ஆகியவற்றால் அவதிப்பட்ட முகமது பர்வேஸ் என்றஅந்தச் சிறுவன் கடந்த 17ம் தேதி இரவு ராஞ்சி அருகே உள்ள ஒரு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டான்.
இந்நிலையில் நேற்று மாலை முகமது திடீரென இறந்து விட்டான். அவன் சார்ஸ் நோயால்தாக்கப்பட்டுதான் இறந்தான் என்று உள்ளூர் செய்தித் தாள் ஒன்றில் செய்தி வெளியானதைத்தொடர்ந்து ராஞ்சி மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது.
ஆனால் அவன் சார்ஸ் நோய் தாக்குதலால் இறக்கவில்லை என்று அம்மருத்துவமனை அறிக்கைவெளியிட்டுள்ளது. சார்ஸ் நோய்க்கான எந்தவிதமான அறிகுறியும் அவன் உடலில் இல்லை என்றும்மருத்தவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.
"அந்தச் சிறுவனுக்கு சார்ஸ் நோய் வருவதற்கான வாய்ப்பே இல்லை. அவன் வெளிநாட்டிற்கோ,வெளியூருக்கோ எங்கும் சென்று வரவில்லை. இங்கேயேதான் இருந்துள்ளான். அப்படிஇருக்கையில் அவனுக்கு எப்படி சார்ஸ் நோய் வரும்?" என்று டாக்டர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
முகமது சார்ஸ் நோயால் இறக்கவில்லை என்பதை டாக்டர்கள் உறுதி செய்துள்ள போதிலும் அங்குதொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications