நாடாளுமன்றத்தில் சார்ஸ் பயம்
டெல்லி:
இந்தியாவில் சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வரும்நிலையில் இவ்விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது.
நம் நாட்டில் கடந்த சில நாட்களில் கோவாவில் ஒருவரும், புனேயில் 4 பேரும், ஜெய்ப்பூரில்ஒருவரும் சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் கோவா நோயாளியும், புனேயில் ஒருவரும் சார்ஸ் நோயிலிருந்து முழுவதுமாகக்குணமடைந்தனர். மற்றவர்களும் விரைவாக குணமாகிக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் சார்ஸ் நோய் விவகாரம் இன்று நாடாளுமன்றத்திலும் எழுந்தது. சார்ஸ் நோயைத்தடுக்கும் முயற்சிகள் குறித்து அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
சார்ஸ் நோய் பாதித்த நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரிலிருந்து சமீபத்தில்தான் நான் நாடுதிரும்பினேன் என்று திரிணாமூல் காங்கிரஸ் எம்.பியான சுதீப் பண்டோபாத்யாய் அப்போதுகூறினார்.
அப்படியானால் இனிமேல் உங்களை அவைக்குள் வர அனுமதிப்பது குறித்து யோசிக்கவேண்டியதுதான் என சபாநாயகர் மனோகர் ஜோஷி கூறியதையடுத்து அவையில் சிரிப்பலைஎழுந்தது.
பின்னர் சார்ஸ் நோய் குறித்தும், அந்நோய் பரவாமல் தடுப்பது எப்படி என்பது குறித்தும்எம்.பிக்கள் விவாதித்தனர். அவர்களுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விளக்கம்அளித்தார்.
சார்ஸ் நோயைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசுமேற்கொண்டுள்ளதாகவும் சுஷ்மா தெரிவித்தார்.
"சுற்றுலா பாதிப்பில்லை":
இதற்கிடையே ராஜ்யசபாவிலும் சார்ஸ் நோய் குறித்து விவாதம் நடைபெற்றது.
சார்ஸ் நோய் காரணமாக இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை குறையவில்லை.இதனால் சுற்றுலாவிற்கு பாதிப்பு எதுவும் நேரவில்லை என்று சுற்றுலாத் துறை அமைச்சர் ஜக்மோகன்கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications