நஷ்டத்தில் மூழ்கியது கோ-ஆப்டெக்ஸ்: காப்பாற்ற மத்திய அரசு முயற்சி
சென்னை:
வண்ணக் கனவுகள் வாங்க கோ-ஆப்டெக்சுக்கு வாருங்கள் என்று தீபாவளி, பொங்கல் தினங்களில் விளம்பரங்களைப் பார்த்திருக்கிறோம்.
அந்த நிறுவனத்தின் அடையாளச் சின்னமான வண்ணத்துப்பூச்சி தமிழ்நாட்டில் கலர் டிவிக்களில் எல்லாம் வண்ணம் பூசியது ஒரு காலம்.ஆனால், இப்போது நிலைமை தலைகீழ்.
தமிழக கைத்தறி, விசைத்தறி உற்பத்திப் பொருள்களின் விற்பனை மையமான கோ-ஆப்டெக்ஸ் பெரும் நஷ்டத்தில் மூழ்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களிடம் இருந்து ஆண்டுக்கு சுமார் ரூ. 300 கோடிக்கும் அதிகமான சேலைகள்,வேட்டிகள், பெட்ஷீட் மற்றும் இதர துணிகளை வாங்கி விற்று வருகிறது கோ-ஆப்டெக்ஸ்.
இதன்மூலம் லட்சக்கணக்கான நெசவாளர்களின் வீட்டில் அடுப்பு எரிய உதவி வருகிறது. ஆனால், பிற தனியார் ஜவுளி நிறுவனங்களுக்குஇணையாக விளம்பரமும், போட்டியும் போட முடியாமல் கோ-ஆப்டெக்ஸ் கடந்த சில ஆண்டுகளாக திணறி வருகிறது.
ஆண்டு முழுவதும் ஏதாவது காரணம் சொல்லி தள்ளுபடி விற்பனை நடத்த வேண்டிய நிலையில் கோ-ஆப்டெக்ஸ் உள்ளது. விலைகளைக்குறைத்து விற்றதால் கிட்டத்தட்ட ரூ. 50 கோடிக்கும் மேல் நஷ்டத்தில் மூழ்கிப் போயுள்ளது.
கையில் பணம் இல்லாததால் நெசவாளர்களிடம் இருந்து ஜவுளிகளை வாங்குவதையும் கோ-ஆப்டெக்ஸ் நிறுத்திக் கொண்டுள்ளது.ஏற்கனவே, தமிழக அரசும் அவர்களிடம் இருந்து ஜவுளிகள் வாங்குவதை நிறுத்திக் கொண்டதால் துயரத்தில் மூழ்கியுள்ளநெசவாளர்களுக்கு இது மரண அடியாக விழுந்துள்ளது.
கோ-ஆப்டெக்சின் நிலைமை மிக மோசமாக இருப்பதால் மத்திய ஜவுளித்துறை கவலை அடைந்துள்ளது. ஒரு காலத்தில் வெளிநாடுகளில்கோ-ஆப்டெக்சின் கைத்தறிப் பொருள்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வந்தது. இதன் மூலம் மத்திய ஜவிளித்துறை பல கோடி லாபம்பார்த்தது.
ஆனால், உள்நாட்டு விற்பனையில் கோ-ஆப்டெக்ஸ் பின் தங்கி இப்போது மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால் அந்த நிறுவனத்தைதானே எடுத்து நடத்த மத்திய ஜவுளித்துறை முடிவு செய்துள்ளது.
இதையடுத்து தமிழக அரசுடன் மத்திய அரசு பேச்சு நடத்தியது. இதில் கோ-ஆப்டெக்ஸை விட்டுக் கொடுக்க தமிழக அரசு ஒப்புக்கொண்டுவிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து விரைவில் கோ-ஆப்டெக்ஸ் மத்திய ஜவுளித்துறையின் கட்டுப்பாட்டில் போகப் போகிறது.இதன் பின்னராவது இந்த நிறுவனம் மீண்டும் எழுந்து நின்றால் சரி.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications