மதுரை காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார் ஸ்டாலின்
மதுரை:
நீதிமன்ற நிபந்தனைப்படி இன்று மு.க. ஸ்டாலின் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
ராணி மேரிக் கல்லூரி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. வரும் 26ம் தேதி வரைஅவர் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றுஉத்தரவிட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் நேற்று கடலூர் சிறையில் இருந்து மதுரைக்குப் புறப்பட்டார். வழியில் திருச்சி சங்கம் ஹோட்டலில் சிறிது நேரம்ஓய்வெடுத்த பின்னர் மதுரை சென்றார். மதுரை எல்லையில் மேயர் செ. ராமச்சந்திரன் தலைமையில் ஏராளமான திமுகவினர் அவருக்குசிறப்பான வரவேற்பு அளித்து அழைத்துச் சென்றனர்.
இன்று காலை அவர் தல்லாகுளம் காவல் நிலையத்துக்கு நூற்றுக்கணக்கான திமுகவினர் புடைசூழ வந்தார். 10 மணிக்கு உள்ளே போய்கையெழுத்திட்ட அவருக்கு உட்கார நாற்காலி கூட தரப்படவில்லை.
வெளியே வந்த ஸ்டாலின் நிருபர்களிடம் பேசுகையில், நீதிமன்ற உத்தரவுப்படி கையெழுத்திடச் சென்றேன். உட்கார நாற்காலி கூடத்தரவில்லை. இதற்காக இங்குள்ள காவலர்களை நான் குறை கூற மாட்டேன். மேலிடத்தில் ஆட்டுவிக்கிறார்கள். இவர்கள் ஆடுகிறார்கள்.இதற்கெல்லாம் இவர்கள் பின்னால் பதில் சொல்ல வேண்டிருக்கும் என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன் என்றார்.
ஸ்டாலினுடன் அழகிரி கோஷ்டி திமுகவினர் யாரும் வரவில்லை.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications