தமிழை செம்மொழியாக அறிவிக்க வாஜ்பாய்க்கு கருணாநிதி கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ் மொழியை செம்மொழியாக (classical language) அறிவிக்க வேண்டும் என்று கோரி பிரதமர் வாஜ்பாய்க்கு திமுக தலைவர்கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

சமீபகாலமாக இந்தக் கோரிக்கை வலுத்து வருகிறது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முதல்வர் ஜெயலலிதா ஆகியோரும் இதுதொடர்பாக பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளனர். கருணாநிதியும் பலமுறை இந்தக் கோரிக்கையை முன் வைத்தார். இப்போது அவரும்கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடித விவரம்:

தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று பலமுறை கோரி வந்துள்ளேன். குறைந்தபட்சம், தேசிய ஜனநாயகக்கூட்டணியின் ஆட்சிக் காலத்திலாவது எனது கோரிக்கை ஏற்கப்படும் என்று நம்புகிறேன்.

செம்மொழியாக அறிவிக்கப்படுவதற்குத் தேவையான அனைத்து நியாயமான காரணங்களும் தமிழுக்கு உண்டு. மைசூரில் உள்ள இந்தியமொழிகளுக்கான மத்திய கழகம், தமிழை செம்மொழியாக அறிவிக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளதை மனதில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியாவை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், ஒருவருக்கு தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகள் தெரிந்தே இருக்கவேண்டும் என்ற நிலை உள்ளதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+