காவிரி கண்காணிப்பு குழுவை உடனே கூட்ட ஜெயலலிதா கோரிக்கை
சென்னை:
கர்நாடகத்திடம் இருந்து தமிழகத்துக்கு உரிய நீர் கிடைக்கச் செய்ய காவிரி நதி நீர் ஆணையத்தின் கண்காணிப்புக்குழுக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
சட்டசபையில் வேளாண்துறை மானியக் கோரிக்கையின்போது இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் பழனிச்சாமிபேசுகையில், வருடா வருடம் ஜூன் 1 ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறைதிறக்கப்படுமா என்ற சந்தேகம் நிலவுகிறத. எனவே இப்போதே தண்ணீரைப் பெறுவதற்கான முயற்சிகளை அரசுமேற்கொள்ள வேண்டும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, காவிரிக் கண்காணிப்பு ஆணையக் கூட்டத்தை உடனடியாக கூட்டக்கோரி மத்திய நீர்வளத்துறை செயலாளர் கோஸ்வாமிக்கு, தமிழக தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ்கடிதம் எழுதியுள்ளார். கடந்த 21ம் தேதியே கடிதம் அனுப்பப்பட்டு விட்டது.
தமிழகத்திற்க உரிய நீரைப் பெற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள்அச்சப்படத் தேவையில்லை. அவர்கள் தங்களது விவசாயப் பணிகளை உரிய காலத்தில் துவங்கும் வகையில்அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
நீர் குறைவாக இருக்கும் காலத்தில், இருக்கும் நீரை எப்படி இரு மாநிலங்களும் பகிர்ந்து கொள்வது என்பதற்கானபார்முலாவை உடனே வகுக்குமாறு மத்திய அரசிடம் கோரியுள்ளோம் என்றார் ஜெயலலிதா.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications