வைகோ கைது விஷயத்தில் மத்திய அரசு குழப்புகிறது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
டெல்லி:
பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டது சரியே என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில்மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இச் சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டது சரியே என்று உச்சநீதிமன்றத்திடம் முதலில் சொன்ன, மத்தியஅரசு பின்னர் (அரசியல் நெருக்குதல்கள் காரணமாக) கைது தவறு என்று கூறியுள்ளது. இதனால், மத்திய அரசின்வாதத்தை நீதிமன்றம் ஏற்கக் கூடாது என்றும் தமிழக அரசு கோரியுள்ளது.
பேச்சுரிமையைத் தடுக்கும் பொடா சட்டத்தின் 21வது பிரிவை எதிர்த்து வைகோ உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்தாக்கல் செய்துள்ள வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. நீதிபதிகள் ராஜேந்திர பாபு, மாத்தூர்அடங்கிய பெஞ்ச் இதை விசாரித்து வருகிறது.
வைகோ கைது குறித்து மத்திய அரசிடம் நீதிமன்றம் விளக்கம் கேட்டது. அப்போது கைது சரியா. இல்லையாஎன்பதில் மத்திய அரசு குழப்பம் செய்தது.
முதலில் முதல்வர் ஜெயலலிதா ஆதரவு துணைப் பிரதமர் அத்வானி, கைது சரி என்று மனு தாக்கல் செய்ய வைத்தார்.
திமுக தலைவர் கருணாநிதியின் கடும் எதிர்ப்பு காரணமாக பிரதமர் வாஜ்பாய் தலையிட்டு கைது தவறு என்றுஇன்னொரு மனு தாக்கல் செய்ய வைத்தார்,
மத்திய அரசு செய்த அந்தக் குழப்பதையே இப்போது தமிழக அரசு தனது வாதத்தில் முக்கியமாக எடுத்துவைத்துள்ளது. வைகோ கைது குறித்து உச்ச நீதிமன்றம் கேட்ட விளக்கத்துக்கு பதில் அளிக்கும் வகையில் தமிழகஅரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ் இன்று மனு தாக்கல் செய்தார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பொடா சட்டத்தின் 21வது பிரிவின்படி தீவிரவாத இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது குற்றம் தான்.
புலிகளை ஆதரித்துப் பேசிய வைகோ கைது செய்யப்பட்டது சரியா இல்லையா என்பதை பொடா நீதிமன்றம்தான் முடிவு செய்ய முடியும்.
முதலில் வைகோவின் கைது சரிதான் என மத்திய அரசு கூறியது. பின்னர் மத்திய அரசின் வழக்கறிஞர் சோலிசொராப்ஜி நிலையை மாற்றிக் கொண்டு கைது தவறு என்று கூறியுள்ளார். தீவிரவாத இயக்கத்தை ஆதரித்துப்பேசினால் மட்டும் அது பொடா சட்டத்தின் கீழ் குற்றமாகிவிடாது என்று அவர் கூறியுள்ளதை ஏற்க முடியாது.
தீவிரவாத்தை அதன் ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டுமானால், அந்த இயக்கங்களை எந்த வகையில்ஆதரித்தாலும் தண்டித்தாக வேண்டும். அதைத் தான் தமிழக அரசு செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
வைகோ காவல் நீட்டிப்பு:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீதான சிறைக் காவல் மே 16ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாக பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறைவாசம்மேற்கொண்டு வரும் வைகோ, இன்று பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அப்போது அவர்காவலை மே 16ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
தவறு செய்துவிட்டேன்: வைகோ
பின்னர் வெளியே கொண்டு வரப்பட்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பொடா சட்டத்திற்கு ஆதரவாகநாடாளுமன்றத்தில் வாக்களித்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை இப்போது தான். உணர்கிறேன். அதைஅனுபவித்தும் வருகிறேன்.
நாங்கள் செய்த மிகப் பெய தவறு என்பதை இப்போது புரிந்து கொண்டுள்ளேன். மத்திய அரசுக்கு ஆதரவாய்வாக்களித்த தர்மத்துக்காக இப்போது பலனை அனுபவித்து வருகிறேன்.
எனது விடுதலைக்காக மட்டும் உச்ச நீதிமன்றத்தில் பொடா சட்டத்தின் 21-வது பிரிவை எதிர்த்து நான் வழக்குத்தொடுக்கவில்லை. வருங்கால சந்ததியினருக்கு பேச்சுரிமை இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் வழக்குத்தொடர்ந்துள்ளேன்.
திமுக தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கலந்து கொள்ளாததுவருத்தம் தருகிறது என்றார்.
எஸ்.பிக்கு வைகோ விட்ட டோஸ்:
வைகோ பேசிக் கொண்டிருந்தபோதே கூடுதல் எஸ்.பி. இளங்கோவன் அங்கு வந்து, நேரமாகிவிட்டு வேனில் ஏறுங்கள் என்றுஅனத்தியபடி இருந்தார்.
ஒரு கட்டத்தில் கடுப்பாகிப் போன வைகோ, நான் நிருபர்களிடம் பேசிவிட்டுத் தான் வருவேன். நிருபர்களுக்கு இடையூறுசெய்யாதீர்கள். நீங்கள் பத்திரிக்கைக்காரராக இருந்தால் இங்கே நில்லுங்கள். இல்லாவிட்டால் இடத்தைக் காலி செய்யுங்கள்என்று கோபத்துடன் சீற, இடத்தை காலி செய்தார் இளங்கோவன்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications