முகமூடிக்கு மாறிய சென்னை விமான நிலையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இந்தியாவில் சார்ஸ் நோய் பரவுவதைத் தடுக்க மேலும் சில நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக விமானநிலையங்களில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமலாக்கப்பட்டுள்ளன.

நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் ஊழியர்களுக்கு முகமூடிகள் வழங்கப்பட்டுள்ளன.

பயணிகளைச் சந்திக்கும் டிக்கெட் வழங்கும் ஊழியர்கள், பயணிகளை சோதனை செய்யும் போலீசார், பெட்டிகளைசோதனையிடும் சுங்கத்துறையினர் ஆகியோருக்கு இந்த முதல் கட்டமாக இந்த முகக் கவசங்கள் தரப்பட்டுள்ளன.

அடுத்தகட்டமாக மற்ற ஊழியர்ளுக்கும் அவை வழங்கப்பட உள்ளன.

சென்னை சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் இந்த முகமூடிகளை அணிந்து தான் பணிபுரிந்து வருகின்றனர்.

முக்கிய குழு அமைப்பு:

இதற்கிடையே நாட்டின் முக்கிய மருத்துவ ஆராய்ச்சி மையங்கள், முக்கிய மருத்துவமனைகள், வைரஸ் ஆராய்ச்சிமையங்களை ஒருங்கிணைந்து செயல்பட வைக்க ஒரு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

ஏர்- இந்தியா விமானங்கள் இயங்கின:

இதற்கிடையே மும்பையில் இருந்து நேற்று ரத்து செய்யப்பட்ட 5 விமானங்களும் இன்று இயக்கப்பட்டன.

மும்பை-டெல்லி-துபாய், மும்பை-கோழிக்கோடு-துபாய் விமானங்கள் தவிர மும்பை-லண்டன்-நியூயார்க்,மும்பை-பாரிஸ்-நியூஜெர்சி ஆகிய விமானங்களும் இயக்கப்பட்டன.

இவை தவிர மும்பை-கொச்சின், மும்பை-பெங்களூர், மும்பை-அகமதாபாத் இணைப்பு விமானங்களும்இயக்கப்பட்டன.

தங்களுடன் விமானங்களில் பணியாற்றும ஊழியர்கள் சார்ஸ் பாதித்த நாடுகளுக்குச் சென்று வரவில்லை என்றசான்றிதழுடன் வந்தால் தான் விமானங்களை இயக்குவோம் என்று கூறி ஏர்-இந்தியா பைலட்டுகள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் நேற்று முழுவதும் மும்பையில் இருந்து கிளம்ப வேண்டிய பல ஏர்-இந்திய விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன. இன்று விமானங்களை பைலட்கள் இயக்க முன் வந்தனர்.

நியூயார்க்கில் இருந்து மும்பை வந்த பயணிகளை டெல்லி கொண்டு செல்லவும், மும்பையில் இருந்து லண்டன்செல்லும் சிறப்பு விமானத்தில் ஏற வேணடிய பயணிகளை அழைத்து வரவும் மும்பை-டெல்லிக்கு இடையே சிறப்புவிமானம் ஒன்றையும் இன்று ஏர்-இந்தியா இயக்கியது.

இதற்கிடையே பைலட்களுக்கும், ஏர்-இந்தியா நிர்வாகத்துக்கும் இடையிலான சமரச பேச்சுவார்ததையும் இன்றுமும்பையில் தொடங்கியது. சார்ஸ் பிரச்சனை தவிர தங்களுக்கு பயிற்சிக் கட்டணமாக ரூ. 50,000 கேட்டும்பைலட்கள் பிரச்சனை செய்து வருகின்றனர்.

சந்தேகம் இருந்தால்.. வெளியே போகக் கூடாது:

இதற்கிடையே சார்ஸ் இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் மும்பை கஸ்தூரிபாய் மருத்துவனையில்சேர்க்கப்பட்டுள்ள 3 பேரும் வெளியே போகக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு நோய் இருப்பது இன்னும் உறுதியாகவில்லை என்றாலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சார்க் அமைச்சர்கள் கூட்டம்:

இதற்கிடையே சார்ஸ் நோய் குறித்து அடுத்த வாரம் சார்க் நாடுகளின் நலத்துறை அமைச்சர்கள் கூட்டம் வரும்செவ்வாய்க்கிழமை மாலத் தீவுகளில் நடக்கவுள்ளது.

இதில் இந்திய நலத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜும் பங்கேற்கிறார்.

இந் நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை இந்தியாவில் 3 பேருக்கு மட்டுமே சார்ஸ்நோய் இருப்பது உறுதியாகியுள்ளதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

ஆனாலும், சண்டீகரில் ஒருவருக்கு சார்ஸ் இருப்பதாகத் தகவல் பரவியதையடுத்து இந்த நகரின் ரயில் நிலையபோர்ட்டர்கள் அனைவரும் முகமூடி அணிந்து பணியில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+