அதிமுகவுக்குத் தாவிய 4 காங். எம்.எல்.ஏக்களின் பதவியை பறிக்க வழக்கு
சென்னை:
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிமுகவுக்குத் தாவிய குமாரதாஸ், ஹக்கீம் உள்ள 4 பேரின் எம்.எல்.ஏ.பதவியையும் பறிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ. ஆனவர்கள் குமாரதாஸ், ஹக்கீம், ஈஸ்வரன், செ.கு.தமிழரசன் மற்றும்மறைந்த சாத்தான்குளம் எம்.எல்.ஏ. மணி நாடார் ஆகியோர்.
த.மா.காவை காங்கிரசுடன் இணைக்க இவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதன் பின்னணியில் அதிமுக இருந்தது.இரு கட்சிளும் இணைந்தபோது இவர்கள் மட்டும் தனி அமைப்பாக செயல்பட்டு வந்தனர்.
சாத்தான்குளம் தேர்தலின்போது வெளிப்படையாக அதிமுகவுக்கு ஆதரவாக ஓட்டு கேட்டனர். தேர்தல்முடிந்தவுடன் செ.கு.தமிழரசன் தவிர மற்ற மூவரும் அதிமுகவில் சேர்ந்துவிட்டனர். தமிழரசன் இன்னும் அதிமுகவில்சேரவில்லையே தவிர அக் கட்சிக்கு ஆதரவாகவே சட்டமன்றத்தில் செயல்பட்டு வருகிறார்.
இதையடுத்து இந்த நால்வரையும் பதவி நீக்கம் செய்யுமாறு சபாநாயகர் காளிமுத்துவிடம் காங்கிரஸ் சட்டமன்றத்தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் கோரிக்கை வைத்தார். ஆனால், அதை காளிமுத்து நிராகரித்துவிட்டார்.
இதனால் இவர்களை பதவி நீக்கம் செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் எஸ்.ஆர்.பி.மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை இவர்கள் 4 பேரும் சட்டமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளவும்,சட்டமன்ற பதிவேட்டில் கையெழுத்திடவும் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில்கோரியுள்ளார்.
இந்த மனு வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications