இன்று முதல் தமிழகம், கேரளத்தில் சங்கராச்சாரியார் சுற்றுப் பயணம்
காஞ்சிபுரம்:
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும், இளையவரான விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும்கேரளத்திலும், தமிழகத்தின் சில பகுதிகளிலும் இன்று முதல் 20 நாட்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கின்றனர்.
இன்று காலை 5 மணிக்கு இருவரும் சங்கர மடத்தில் சந்திர வம்புலீஸ்வரர் பூஜை நடத்திவிட்டுப் புறப்பட்டனர்.
நாளை விழுப்புரத்தில் பல்வேறு பூஜைகளில் பங்கேற்கும் அவர்கள், 28,29,30ம் தேதிகளில் கோவை காமாட்சிஅம்மன் கோவிலில் தங்கியிருந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவர்.
30ம் தேதி இரவு கேரளா செல்லும் அவர்கள் திருச்சூரில் மே 3ம் தேதி வரை தங்குகின்றனர். 3ம் தேதி ஆதிசங்கரர்பிறந்த காலடி பெரவம்பூர் சென்று அங்குள்ள சங்கர மடத்தில் தங்குவர். 5ம் தேதி வரை அங்கு தங்கியிருந்துஆதிசங்கரர் ஜெயந்தி விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கின்றனர்.
அங்கு சிறப்பு பூஜைகள், ஹோமங்கள், யாகங்களும் நடத்த உள்ளனர். 32 பட்டத்து யானைகள் அணி வகுக்கஊர்வலமும் நடக்கவுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சாதுக்கள் பங்கேற்கஉள்ளனர்.
பின்னர் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை கொச்சியில் தங்கி பக்தர்களை சந்திப்பர். 10ம் தேதி திருச்சூர் வரும்அவர்கள் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை பாலக்காட்டில் தங்கியிருந்து பக்தர்களுக்கு ஆசி தருகின்றர்.
இதன் பின்னர் 14ம் தேதி மீண்டும் தமிழகம் வருகின்றனர். நேராக பழனிக்கு வரும் அவர்கள் 16ம் தேதி வரைஅந்த நகரில் சிறப்புப் பூஜைகள் நடத்துகின்றனர். 14ம் தேதி நரசிம்ம பூஜையும், 15ம் தேதி பெளர்ணமி பூஜையும்,16ம் தேதி வெள்ளிக்கிழமை சிறப்புப் பூஜையும் நடத்துவிட்டு காஞ்சிபுரம் திரும்புகின்றனர்.
காஞ்சி மருத்துவமனை: ஜெ. திறப்பு
இதற்கிடையே ரூ. 20 கோடி செலவில் சென்னை பெரும்பாக்கத்தில் சங்கர மடம் வாங்கியுள்ள காஞ்சி காமகோடிசங்கரா மருத்துவமனையை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்துள்ளார்.
தமிழ்நாடு மருத்துவமனை என்ற பெயரில் செயல்பட்டு வந்த மருத்துவமனையை சங்கர மடம் வாங்கியுள்ளது.ஜூன் மாதம் முதல் செயப்படப் போகும் இந்த மருத்துவமனையை மேலும் ரூ. 25 கோடியில் சங்கர மடம்மேம்படுத்தவுள்ளது.
150 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் ஏழை, எளியவர்களுக்கு குறைந்த செலவில் அனைத்துவிதமான சிகிச்சைகளும் அளிக்கப்பட உள்ளதாக சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும்,விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் தெரிவித்தனர்.
லாப நோக்கமில்லாமல் இந்த மருத்துவமனை செயல்படும் என்றனர்.
-->












Click it and Unblock the Notifications