புனே சார்ஸ் நோயாளிகள் குணமடைந்தனர்
புனே:
புனேயில் சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 4 நோயாளிகள் குணமடைந்து விட்டதாக அவர்களுக்குசிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் விமலா, அவருடைய மகள் ஜூலி, மகன் ஸ்டான்லி டிசில்வா மற்றும்ஸ்டான்லியின் மாமா ஜோசப் பவார் ஆகியோர் சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு சித்தார்த்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
சார்ஸ் நோய் பயத்தையும் மீறி ஜூலி கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டார் என்பதுநினைவிருக்கலாம்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்த மூவரும் தற்போது சார்ஸ்நோயிலிருந்து குணமாகி விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் உடம்பில் தற்போதுசார்ஸ் நோய் கிருமிகள் இல்லை என்றும் அவர்கள் கூறினர்.
அடுத்த ஒரு சில நாட்களில் அவர்கள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்என்றும், இருந்தாலும் அவர்கள் தங்கள் வீட்டிலேயே தனியாக ஒரு வாரத்திற்கு வைக்கப்படுவார்கள்என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே சித்தார்த் மருத்துவமனையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வரும் மக்கள் சிலர்சார்ஸ் நோய் தங்களையும் தாக்கி விடுமோ என்ற அச்சத்தில் வீடுகளைக் காலி செய்து வேறுஇடங்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர்.
சீனாவில் மேலும் 9 பேர் பலி:
இந்நிலையில் சீனாவில் மட்டும் சார்ஸ் நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 131ஆகஉயர்ந்துள்ளது.
மேலும் சீனாவில் 2,914 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹாங்காங்கில் மேலும் 12 பேர்சார்ஸ் நோய் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
சினிமா தியேட்டர்கள் மூடல்:
இதற்கிடையே சார்ஸ் நோய் மேலும் பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக சீனாவில் சினிமாதியேட்டர்கள், இன்டர்நெட் கபேக்கள் மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான இடங்கள்மூடப்பட்டுள்ளன. மேலும் திருமணங்கள் பதிவு செய்யப்படுவதும் சீனாவில் நிறுத்தப்பட்டுள்ளது.
சீனாவுக்கு உதவ அமெரிக்கா தயார்:
இதற்கிடையே சார்ஸ் நோயை எதிர்த்துக் கடுமையாகப் போராடி வரும் சீனாவுக்கு உதவ தங்கள்நாடு தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தெரிவித்துள்ளார்.
சீன அதிபர் ஹூ ஜிந்தோவுடன் டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசியபோது அவரிடம் புஷ்இவ்வாறு தெரிவித்தார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications