சென்னை போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டார் ஸ்டாலின்
சென்னை:
கடந்த 4 நாட்களாக மதுரையில் தங்கியிருந்து அங்குள்ள போலீஸ் நிலையத்தில் கையெழுத்துப்போட்டு வந்த திமுக இளைஞரணிச் செயலாளர் ஸ்டாலின் இன்று சென்னை-வேளச்சேரி போலீஸ்நிலையத்தில் கையெழுத்துப் போட்டார்.
சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் அத்துமீறி நுழைந்ததாகக் கடந்த 9ம் தேதிநள்ளிரவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டு, கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். கைதுசெய்தபோது போலீசாரைக் கொலை செய்ய முயற்சித்ததாகவும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் கடந்த வாரம் ஸ்டாலினுக்கு சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றம் ஜாமீன்வழங்கியது.
ஆனால் அவர் ஏப்ரல் 26ம் தேதி வரை மதுரையில் தங்கியிருந்து தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில்தினமும் கையெழுத்துப் போட வேண்டும் என்றும் அதன் பின்னர் சென்னையில் உள்ள வேளச்சேரிபோலீஸ் நிலையத்தில் கையெழுத்துப் போட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து மதுரையில் தங்கியிருந்து நேற்று வரை தினமும் காலை போலீஸ் நிலையத்தில் ஆஜராகிகையெழுத்துப் போட்டு வந்தார் ஸ்டாலின். பின்னர் நேற்று இரவு மதுரையிலிருந்து கிளம்பி இன்றுகாலை சென்னை வந்து சேர்ந்தார்.
நீதிமன்ற உத்தரவுப்படி இன்று காலை வேளச்சேரி காவல் நிலையத்தில் ஸ்டாலின் ஆஜராகிகையெழுத்துப் போட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், மதுரையில் நானே நாற்காலியை போலீஸ்ஸ்டேஷனுக்குக் கொண்டு சென்றேன். இங்கோ அவர்களே நாற்காலி போட்டு உட்காரச்சொன்னார்கள். அது மட்டும்தான் வித்தியாசம். இது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்ததுஎன்றார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications