ஜெ. மீதான சொத்து குவிப்பு வழக்கு: மத்திய, தமிழக அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி:
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தன்னையும் ஒரு வாதியாகச்சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தொடர்ந்த மனுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் உச்ச நீதிமன்றம்நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன்மிகவும் சூடுபிடித்தது. வழக்கு விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பைஒத்திவைத்தது தனி நீதிமன்றம்.
இந்நிலையில், ஜெயலலிதா தற்போது முதல்வராக இருப்பதால் அவருக்கு சாதகமாகஅளிக்கப்படலாம் என்று திமுக கருதியது. எனவே இவ்வழக்கின் விசாரணையை வேறு மாநிலத்திற்குமாற்ற வேண்டும் என்று கோரி திமுக பொதுச் செயலாளரான அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
ஆனால் அன்பழகனின் கோரிக்கையை எதிர்த்து ஜெயலலிதா மற்றொரு மனுவைத் தாக்கல்செய்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி வைரவா மற்றும் நீதிபதி அகர்வால் ஆகியேர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச், இது தொடர்பாக 4 வாரத்திற்குள் பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றுஅன்பழகனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
மேலும் சொத்துக் குவிப்பு வழக்கில் தன்னையும் ஒரு வாதியாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்என்று சுவாமியும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அம்மனுவையும் ஏற்ற நீதிபதிகள் இது தொடர்பாக மத்திய அரசும் தமிழக அரசும் விளக்கம்அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
-->












Click it and Unblock the Notifications