தமிழகத்தில் கோடை சிறப்பு கிரிக்கெட் பயிற்சி முகாம்கள்
சென்னை:
கிரிக்கெட், ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுக்களுக்கு மாவட்ட தலைநகரங்களில் சிறப்புகோடைக்கால பயிற்சி முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்அறிவித்துள்ளது.
இந்த ஆணையத்தின் செயலாளர் டேவிதார் இன்று இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகப் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கிரிக்கெட் ஆர்வத்தை வளர்க்கும் வகையில்கிரிக்கெட் அகாடமி ஒன்றை முதல் முறையாக சென்னையில் அமைக்க ஆணையம் முடிவுசெய்துள்ளது.
கிரிக்கெட் விளையாட்டின் முன்னேற்றத்திற்கு இந்த அகாடமி ஒரு முன்னோடியாக விளங்கும்.
இதற்காக சென்னை அசோக் நகர்-புதூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.6 லட்சம்செலவில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படவுள்ளது.
மேலும் கால்பந்து, ஹாக்கி, குத்துச் சண்டை, கூடைப் பந்து, வாலிபால், தடகளம் மற்றும் கிரிக்கெட்ஆகிய விளையாட்டுகளுக்கும் சிறப்பு கோடைக்கால பயிற்சி முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இந்தச் சிறப்புப் பயிற்சி முகாம்கள் நடைபெறுகின்றன.இதற்காக ரூ.100 கட்டணம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 3 வார காலத்திற்கு இந்தப் பயிற்சிமுகாம் நடக்கும் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இன்று சென்னையில் கோடைக் கால சிறப்பு பயிற்சி முகாம்கள் தொடங்கிவைக்கப்பட்டன. கல்வி அமைச்சர் செம்மலை, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்துணைத் தலைவரும் முன்னாள் டி.ஜி.பியுமான தேவாரம் ஆகியோர் தொடக்க விழாவில் கலந்துகொண்டனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications