சென்னை திரும்பினார் கருணாநிதி: ""தமிழுக்காக நீண்ட காலம் வாழ ஆசை""

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ் நலத்துக்காகவும், அதன் வளர்ச்சிக்கு உழைப்பதற்காகவும் நீண்ட காலம் வாழஆசைப்படுகிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி உருக்கத்துடன் கூறியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை கோயம்புத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் மேடையிலேயே அவர் மயக்கமடைந்தார்.இதனால் திமுகவினர் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பும், கவலையும்தொற்றிக் கொண்டது.

கோவையிலேயே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு இன்று அவர் சென்னைதிரும்பினார். அவரை ஏராளமான பொது மக்களும் திமுகவினரும் சந்தித்து நலம் விசாரித்தனர்.ஆயிரக்கணக்கானோரை அவர் சந்திப்பது அவரது உடல் நலத்துக்கு இப்போதைக்கு நல்லதல்ல எனமருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனால் அவரைச் சந்திக்க கோபாலபுரம் இல்லத்துக்கோ, அண்ணா அறிவாலயதுக்கோ வரவேண்டாம் என திமுக தொண்டர்களுக்கு கட்சித் தலைமை கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையே தனது உடல் நலம் பாதிக்கப்பட்டது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ளஅறிக்கையில்,

கோயம்புத்தூரில் "தொல்காப்பியப் பூங்கா" நூலின் 8வது பதிப்பு வெளியீட்டு விழாவின்போதுஅரங்கத்தில் காற்றோட்டம் இல்லாத காரணத்தால், மயக்கம் ஏற்பட்டது.

கோயம்புத்தூர் என்றாலே நீலகிரி மலைத் தாயின் குளிர்க் காத்து வருடல் இருக்கும் என்றஎதிர்பார்ப்பில் தவறு இல்லை அல்லவா? ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு மாறாக, "இது கோவைஅல்ல, இதுதான் கோடை" என்று கூறும் அளவுக்கு வெப்பம் காலையிலிருந்தே தகிக்கத் தொடங்கிவிட்டது.

விழா மேடையில் சுழன்று கொண்டிருந்த மின் விசிறிகளும் வெப்பத்தை அள்ளித் தெளித்துக்கொண்டிருந்தன. நான் ஏற்புரை ஆற்றுவதற்கு முன்பே என்னுடைய நாக்கு வறண்டது, உதடுகள்காய்ந்துபோய் விட்டன.

அருகிலிருந்த அமைச்சர் கண்ணப்பனிடம் நிலையைச் சொன்னேன். அவர் காட்டிய ஜாடையைத்தொடர்ந்து அமைச்சர் டி.ஆர். பாலுவும், தம்பி துரைமுருகனும் மேடை நோக்கி ஓடி வந்தனர்.

குடும்ப டாக்டர் மேடையிலேயே என்னைச் சோதித்து விட்டு என்னைப் பேச வேண்டாம் என்றுதடுத்தார். அவர் கூறியதை அலட்சியம் செய்து பேச ஆரம்பித்தேன். தொடர்ந்து 10 நிமிடங்களுக்குப்பேசினேன். ஆனால் நடந்தது வேறு. அதற்கு மேல் பேச முடியவில்லை.

அதற்குப் பின்னர் ஒரு மணி நேரம் என்ன நடந்தது என்று எனக்கு நினைவில்லை. கோவைபக்தவச்சலம் மருத்துவமனை டாக்டர்கள் என்னைக் காப்பாற்றினாலும் என்னைக் குணமாக்கும்மருந்து, எனது பேச்சைக் கேட்க வந்திருந்த ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த தொண்டர்கள்கூட்டம்தான். எனவேதான் அந்தக் கூட்டத்தை நோக்கி ஓடோடிச் சென்றேன். பேசினேன்.

தமிழகத்திற்காகவும், தமிழ் நலத்தின் வளர்ச்சிக்காகவும் கடுமையாக உழைக்க நான் நீண்ட காலம்வாழ ஆசைப்படுகிறேன்.

கிடுகிடு பள்ளத்தில் விழ இருந்த இந்தப் பழைய பார வண்டி, விழுந்தே விட்டது என்று சிலர் சிரித்துமகிழ்வதற்குள், முனையில் ஒரு கல் பட்டுச் சக்கரம் தப்பித்துக் கொண்டதைப் போல, கோயம்புத்தூர்நிகழ்ச்சிகளுக்குச் சென்று திரும்பியுள்ளேன்.

என்னுடைய உடல் நலம் குறித்து விசாரித்த ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், பிரதமர் வாஜ்பாய்ஆகியோருக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தனது என்று அறிக்கையில் கூறியுள்ளார் கருணாநிதி.

முழு ஓய்வெடுக்க அறிவுரை:

இந்நிலையில் கருணாநிதி அடுத்த சில நாட்களுக்கு முழு ஓய்வு எடுக்க வேண்டும் என டாக்டர்கள்அறிவுறுத்தியுள்ளனர்.

கோயம்புத்தூரிலிருந்து இன்று காலை சென்னை திரும்பினார் கருணாநிதி. பிரபல இருதயநிபுணரான டாக்டர் தணிகாசலம் தலைமையிலான டாக்டர்கள் அவருடைய உடலைப்பரிசோதித்தனர்.

கருணாநிதி நன்றாகக் குணமடைந்து வருவதாகத் தெரிவித்த டாக்டர்கள், ஆனாலும் அவர் அடுத்தசில நாட்களுக்கு ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது என்றும் கூறினர்.

திமுகவினருக்கு வேண்டுகோள்:

இதற்கிடையே கருணாநிதிக்கு சில நாட்கள் ஓய்வு தேவை என்பதால், அவரை சந்தித்து உடல் நலம்விசாரிக்க திமுகவினர் நேரில் வருவதைத் தவிர்க்குமாறு திமுக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வெளியிட்டுள்ளஅறிக்கையில், கருணாநிதிக்கு சில நாட்கள் ஓய்வு தேவை என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.எனவே, அவரது உடல் நலம் குறித்து விசாரிக்க தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் நேரில்வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அறக்கட்டளைக்கு ரூ.15 லட்சம்:

இந்நிலையில் "தொல்காப்பியப் பூங்கா"வின் 8வது பதிப்பின் மூலம் கிடைத்த நிதியிலிருந்து ரூ.15லட்சத்தை திமுக அறக்கட்டளைக்கு வழங்கியிருப்பதாக கருணாநிதி தெரிவித்துள்ளார்.

வசதியற்ற ஏழை திமுக தொண்டர்களின் குழந்தைகளின் கல்விக்காகவும், மருத்துவ உதவிக்காகவும்திமுக அறக்கட்டளையிலிருந்து நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தேன். அதற்காகமதுரை, திருச்சி, வேலூர் நகரங்களில் நடந்த "தொல்காப்பியப் பூங்கா" நூல் வெளியீட்டு விழாவின்மூலம் வசூலான தொகையிலிருந்து மொத்தம் ரூ.22 லட்சம் நிதி, அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது.

அதன்படி தற்போது கோயம்புத்தூரில் நடந்த 8வது பதிப்பு வெளியீட்டு விழாவின்போது வசூலானபணத்திலிருந்து ரூ.15லட்சம் நிதி வழங்கப்படுகிறது என்று கருணாநிதி கூறியுள்ளார்.

வைரமுத்து சந்திப்பு:

இன்று காலை கருணாநிதியை அவரது இல்லத்தில் கவிஞர் வைரமுத்து சந்தித்து உடல் நிலை விசாரித்தார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+