சார்ஸ்: தமிழக விமான நிலையங்களில் இலவச முகமூடிகள்
சென்னை:
சார்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்தவக் கல்வி இயக்குநர் டாக்டர் ரவீந்திரநாத் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற மகளிர் சர்வதேச மாநாட்டில் டாக்டர் ரவீந்திரநாத் பேசுகையில்,
சார்ஸ் நோயால் பாதிக்கப்படுபவர்களைச் சேர்ப்பதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுமருத்துவமனைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதற்காகத் தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் சார்ஸ் நோய் கண்டறிவதற்கானபரிசோதனைகளின்போது ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் (க்ண்ஞு ச்ணஞீ ணாடணூணிதீ) கருவிகள்மட்டும் தான் உபயோகப்படுத்தப்படும்.
மேலும் சார்ஸ் நோய் பரவாமல் தடுக்கும் முகமூடிகள் தற்போது விமான நிலையம் மற்றும்துறைமுகங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. விரைவில் இவற்றை இலவசமாகத் தரவும்ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார் டாக்டர் ரவீந்திரநாத்.
சுகாதார அமைச்சர்கள் மாநாடு:
இதற்கிடையே சார்ஸ் நோய் தொடர்பாக விவாதிப்பதற்காக சார்க் நாடுகளின் சுகாதாரஅமைச்சர்களின் மாநாடு ஒன்று நாளை மாலத் தீவில் நடைபெறுகிறது.
சார்ஸ் நோய் பரவுவதைத் தடுப்பது எப்படி என்பது குறித்து இந்த மாநாட்டின்போது விவாதிக்கப்படஉள்ளது.
இந்தியா சார்பில் மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் ராஜா இம்மாநாட்டில் கலந்துகொள்கிறார். இதற்காக மாலத் தீவு செல்லும் வழியில் சென்னை வந்த அவர் நிருபர்களிடம்பேசுகையில்,
இந்தியாவில் இதுவரை 10 பேருக்கு சார்ஸ் இருப்பதாக கண்டறியப்பட்டு, 7பேருக்கு அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சார்ஸ் நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், குணப்படுத்துவது எளிது. எனவே மக்கள்பீதியடையத் தேவையில்லை.
மாநில அரசுகள் விழிப்புடன் இருந்து இந்நோயைத் தடுக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.இருப்பினும் மாநில அரசுகள் கோரும் எந்த உதவியையும் செய்ய மத்திய அரசு தயாராகவே உள்ளதுஎன்றார் ராஜா.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications