தற்கொலை ஆசாமிகள்: தலைமைச் செயலகத்தில் ரகசிய கேமராக்கள்
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மனு கொடுக்க வரும் பலர் அவரை சந்திக்கமுடியாததால் விஷம் குடித்து அங்கேயே தற்கொலை செய்து வருவதையடுத்து அதைத் தடுக்க நடவடிக்கைகளைஎடுக்கப்பட்டுள்ளனர்.
கோட்டைக்கு மனு கீெடுக்க வரும் பொது மக்களைக் கண்காணிக்க நூற்றுக்கணக்கான போலீசார் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் பொது மக்களின் பைகளை வாங்கி விஷம் ஏதாவது இருக்கிறதா என்றுசோதனை நடத்தி வருகின்றனர்.
ஆனால், இதையும் மீறி பலர் சேலை, வேட்டியில் மறைத்து வைத்துள்ள விஷ பாட்டிலை எடுத்து வாயில் ஊற்றிக்கொண்டுவிடுகின்றனர். இதனால் தயார் நிலையில் ஆம்புலன்ஸை நிறுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இதுவரை கோட்டையில் 14 பேர் வரை விஷம் குடித்துள்ளனர். இதில் 3 பேர் காலி. 11 பேர் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு பிழைக்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், தினமும் 10 பேராவது நான் இங்கேயே தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன். என் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோட்டை வளாகத்தில் நின்றுமிரட்டுகின்றனர்.
இதையடுத்து கோட்டையில் மன நல மருத்துவர் குழு நிரந்தரமாக முகாமிட்டுள்ளது. ஆனால், இவர்கள்தற்கொலைக்கு முயல்பவர்களைத் தான் கூப்பிட்டு அறிவுரை சொல்லி திருத்த முடியுமே தவிர, விஷம்குடித்துவிட்டவர்களை ஒன்றும் செய்ய முடியாத நிலை உள்ளது.
இதனால் கோட்டையில் போலீசார் எந்த நேரமும் டென்சனுடன் தான் சுற்றி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. யாராவதுதிரு திருவென முழித்தாலே, மிகவும் களைப்புடன் காணப்பட்டாலோ அவரைச் சுற்று போலீசார் குவிவதும், யோவ்எதையும் குடிச்சிட்டியா என்பது கேட்பதும் அன்றாக விஷயமாகிவிட்டது.
ஆனால், போலீசாரின் தீவிர கண்காணிப்பையும் மீறி விஷம் குடிப்பு நிகழ்ச்சிகள் நடந்து விடுவதால் இப்போதுகேமராக்கள் மூலம் பொது மக்களைக் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கோட்டையின் பலஇடங்களிலும் குளோஸ்-சர்க்யூட் கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன.
இந்த கேமராக்கள் கோட்டை வளாகத்தில் நடமாடும் அனைவரையும் கண்காணிக்க ஆரம்பித்து விட்டனர் உளவுப்பிரிவு போலீசார்.
மேலும் பல கேமராக்களும் பொறுத்தப்பட்டு வருகின்றன.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications