கருணாநிதியை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்த அழகிரி, ஸ்டாலின்
கோயம்புத்தூர்:
திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவருடைய மகன்கள்அழகிரியும், ஸ்டாலினும் கோயம்புத்தூருக்கு விரைந்து சென்று நேரில் அவருடைய உடல் நலம்குறித்து விசாரித்தனர்.
கோயம்புத்தூரில் நடைபெற்ற "தொல்காப்பியப் பூங்கா" வெளியீட்டு விழாவின்போதுகருணாநிதிக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார். சுமார் 3 மணி நேரம் சிகிச்சைக்குப் பின்னர் அவர் அங்கு தங்கியிருந்த லாட்ஜுக்குத்திரும்பினார்.
இதற்கிடையே திமுக இளைஞரணிச் செயலாளருமான ஸ்டாலின் மற்றும் மதுரையில் உள்ள அழகிரிஆகியோருக்கு கருணாநிதி உடல் நலம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மதுரையிலிருந்து கோயம்புத்தூருக்கு வந்த அழகிரி நேற்று காலை சுமார் 11.30மணிக்கு கருணாநிதியைச் சந்தித்து அவருடைய உடல் நலம் குறித்து விசாரித்தார். அழகிரியைப்பார்த்து புன்னகைத்த கருணாநிதி, தன் கையில் மகள் கனிமொழியின் மகனை வைத்துக் கொஞ்சிக்கொண்டிருந்தார்.
உடனே கனிமொழியின் மகனைத் தானும் கையில் வாங்கிக் கொஞ்சி மகிழ்ந்தார் அழகிரி. இதைக்கருணாநிதி பார்த்து ரசித்தார்.
இதற்கிடையே ராணி மேரி கல்லூரி விவகாரம் தொடர்பாகக் கைதாகி ஜாமீனில் வெளியாகியிருந்தஸ்டாலின், நேற்று காலை சென்னை-வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் கையெழுத்துப் போட்டஉடனே விமானம் மூலம் கோயம்புத்தூருக்குக் கிளம்பி வந்து சேர்ந்தார்.
நேற்று பிற்பகல் சுமார் 1 மணிக்கு கருணாநிதியைச் சந்தித்து அவருடைய உடல் நலம் குறித்துவிசாரித்தார். அதேபோல் கருணாநிதியின் மகள் செல்வியும் கோயம்புத்தூர் வந்து அவருடையஉடல் நலம் குறித்து விசாரித்தார்.
கருணாநிதியை நேரில் சந்திப்பதற்காக கோயம்புத்தூர் வந்தபோதிலும் ஸ்டாலினும் அழகிரியும்ஒருவரையொருவர் நேரில் சந்தித்துக் கொள்ளவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications