தாயின் பெயரை இனிஷியலாக போடலாம்: பெண் இனிமேல் குடிமகள்- தமிழக அரசு அறிவிப்பு
சென்னை:
பெண் பிரஜைகளை (Women citizen) இனி குடிமகள் என்று தான் குறிப்பிடவேண்டும். "சிட்டிசனில்"குடிமகன் மட்டுமல்ல, குடிமகளும் அடக்கம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதே போல தாயின் பெயரின் முதல் எழுத்தை குழந்தைகள் இனி இனிஷியலாகப் போட்டுக்கொள்ளலாம் எனவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக சட்டசபையில் பேசிய ஜெயலலிதா, தமிழக சட்டசபையில் பெண் எம்.எல்.ஏக்கள் பதவிஏற்கும்போது "சிட்டிசன்" என்ற ஆங்கில வார்த்தைக்கு இணையான தமிழ் வார்த்தையாக "குடிமகன்"என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.
பெண்களை "குடிமகள்" என்று அழைப்பதுதானே பொருத்தமாக இருக்கும். நான் முதல்வராகப் பதவிஏற்கும் போது கூட "இந்தியக் குடிமகனாகிய நான்" என்று கூறித்தான் பதவி ஏற்றேன்.
இது மிகவும் வேடிக்கையாக உள்ளது. இது தொடர்பாகக் கேட்டபோது "குடிமகள்" என்ற வார்த்தைஅரசாணையில் இல்லை என்று கூறி விட்டார்கள்.
இதையடுத்தே இது தொடர்பாகப் புதிய அரசாணை கொண்டுவர வேண்டும் என்று தமிழக அரசுமுடிவு செய்தது. அதன்படி தற்போது புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
எனவே இனிமேல் "சிட்டிசன்" என்ற வார்த்தைக்கு "குடிமகன்" மட்டுமல்லாமல் "குடிமகள்" என்றவார்த்தையையும் தமிழில் பயன்படுத்த வேண்டும். ஆண்கள் என்றார் "குடிமகனாகிய நான்" என்றுகூறியும், பெண்கள் என்றால் "குடிமகளாகிய நான்" என்றும் கூறி பதவி ஏற்றுக் கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு தாயின் இனிஷியல்:
மேலும் பெற்றோர்கள் விரும்பினால் தங்கள் குழந்தைகளின் பெயருக்கு முன் தாயின் பெயரையும்இனிஷியலாகச் சேர்த்துக் கொள்ளலாம். இது தொடர்பாகவும் புதிய அரசாணைவெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் கடந்த 1994ம் ஆண்டு மார்ச் 28ம் தேதி இதுதொடர்பாக ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தந்தை இல்லாத பட்சத்தில் குழந்தைகள் தங்கள்தாயின் பெயரையே இனிஷியலாகப் போட்டுக் கொள்ள அந்த அரசாணை வழி செய்தது.
தற்போது அந்த அரசாணையில் சில மாறுதல்கள் செய்யப்பட்டு புதிய அரசாணைவெளியிடப்பட்டுள்ளது. மாநிலப் பள்ளிக் கல்வித் துறை நேற்று இந்தப் புதிய அரசாணையைவெளியிட்டுள்ளது.
அதன்படி ஒரு குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும்போது, அக்குழந்தையின் பெயருக்கு முன்பாகத்தாயின் பெயரில் உள்ள முதல் எழுத்தையும் அதையடுத்து தந்தையின் பெயரில் உள்ள முதல்எழுத்தையும் இனிஷியல்களாகப் பயன்படுத்தலாம்.
அல்லது, பெற்றோரின் விருப்பப்படி தாயின் பெயரில் உள்ள முதல் எழுத்தை மட்டுமோ, அல்லதுதந்தையின் பெயரில் உள்ள முதல் எழுத்தை மட்டுமோ குழந்தையின் இனிஷியலாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார் ஜெயலலிதா.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications