ரிப்பன் கட்டடத்தில் உண்ணாவிரத முயற்சி: 11 காங்கிரஸ் கவுன்சிலர்கள் கைது
சென்னை:
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தனி அறை கேட்டு உண்ணாவிரதம் இருக்க முயன்ற 11காங்கிரஸ் கவுன்சிலர்களைப் போலீசார் கைது செய்தனர்.
சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் கட்டட வளாகத்தில் காங்கிரஸ்கவுன்சிலர்களுக்குத் தனி அறை ஒதுக்க வேண்டும் என்று கோரி 11 காங்கிரஸ் கவுன்சிலர்களும்நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக துணை மேயர் கராத்தே தியாகராஜன், கமிஷனர் கலைவாணன் ஆகியோருக்குகோரிக்கை கடிதமும் அனுப்பியிருந்தனர். ஆனால் இதுவரை ஒரு நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இதைத் தொடர்ந்து இன்று உண்ணாவிரதம் இருக்கப் போவதாக காங்கிரஸ் கவுன்சிலர்கள்கூறியிருந்தனர். அதன்படி காலையில் அவர்கள் ரிப்பன் கட்டடவளாகத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர்.
இதையடுத்து அனுமதியில்லாமல் உண்ணாவிரதம் இருக்க முயன்றதாக கூறி 11 பேரையும் சிலகாங்கிரஸ் தொண்டர்களையும் போலீஸார் கைது செய்து, பெரியமேடு காவல் நிலையத்திற்குக்கொண்டு சென்றனர்.
சோ.பா. கண்டனம்:
இந்நிலையில் காங்கிரஸ் கவுன்சிலர்கள் கைதுக்கு காங்கிரஸ் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் கடும்கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சி படுமோசமாக உள்ளது. தனிஅறை கேட்டு பலமுறை விண்ணப்பித்தும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால்தான் அறவழியில் உண்ணாவிரதம் இருக்க காங்கிரஸ் கவுன்சிலர்கள் முடிவு செய்தனர்.ஆனால் அவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். கைதுசெய்தாலும் தொடர்ந்து போராட்டம்நடைபெறும் என்று தன் அறிக்கையில் கூறியுள்ளார் சோ.பா.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications