என்னிடம் ஆயுதம் இருக்கவில்லை: போலீசாரே கொண்டு வந்து நாடகம்- கோபால்
சென்னை:
சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாங்களே ஆயுதங்களைக் கொண்டு வந்து விட்டு, என்னிடமிருந்துகைப்பற்றியதாக நாடகமாடுகின்றனர் என்று "நக்கீரன்" ஆசிரியர் கோபால் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை பூந்தமல்லியில் உள்ள பொடா சிறப்பு நீதிமன்றத்தில் கோபால் ஆஜர்படுத்தப்பட்டார்.அப்போது அவர் பதுக்கி வைத்திருந்ததாகக் கூறப்படும் ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிஆகியவற்றைப் போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
மேலும் கோபாலிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்தும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிக்கை ஒன்றைநீதிபதி ராஜேந்திரனிடம் தாக்கல் செய்தனர்.
சி.பி.சி.ஐ.டி. அறிக்கை விவரம்:
கோபாலிடம் நடந்த விசாரணையின்போது வீரப்பனுக்கும், தனக்கும் இடையே நெருங்கியதொடர்பு இருப்பதை கோபால் ஒத்துக் கொண்டார்.
மேலும், தமிழர் விடுதலைப் படை, தமிழர் மீட்புப் படை ஆகியவற்றிற்கு ஆதரவு அளித்துவந்ததையும் ஒத்துக் கொண்டார்.
கோபால் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சி.பி.சி.ஐ.டி. கண்காணிப்பாளர்தலைமையிலான ஒரு குழு சென்னையிலிருந்து ஈரோடு புறப்பட்டுச் சென்றது. ஏப்ரல் 26ம் தேதிதிம்மம் காட்டுக்கு இந்தக் குழுவினர் சென்றனர்.
அங்கு கோபால் காட்டிய இடத்திலிருந்து, எஸ்.பி.பி.எல். ரக துப்பாக்கி, நாட்டுத் துப்பாக்கி,எஸ்.பி.பி.எல். ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் 23 தோட்டாக்கள், 123 ஜெலட்டின் குச்சிகள்,150 டெட்டனேட்டர்கள், துப்பாக்கியில் பொருத்தப்படும் டெலஸ்கோப், 2 வாக்கிடாக்கிகள்,கூடாரம் அமைக்கப் பயன்படுத்தப்படும் பாலிதீன் ஷீட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தப் பொருட்கள் அனைத்தும் நக்சலைட் இயக்கங்களுக்குக் கொடுப்பதற்காக மறைத்துவைக்கப்பட்டிருந்ததாக கோபால் தெவித்தார் என்று சி.பி.சி.ஐ.டியின் அறிக்கையில்தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இது தொடர்பாக கோபாலின் கருத்துக்களை எழுதி வாங்கிக் கொண்டார் நீதிபதிராஜேந்திரன். போலீஸ் காவலில் என்ன என்னவெல்லாம் நடந்தது என்பது குறித்து 15 பக்கங்களுக்குபேப்பரில் எழுதிக் கொடுத்தார் கோபால்.
மே 23 வரை காவல் நீட்டிப்பு:
இதையடுத்து மே 23ம் தேதி கோபாலை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி ராஜேந்திரன்உத்தரவிட்டார்.
விசாரணை முடிந்த பின்னர் நீதிமன்றத்தை விட்டு வெளியே கொண்டுவரப்பட்ட கோபால் அவசரஅவசரமாக போலீஸ் வேனில் ஏற்றப்பட்டார். அப்போது அவர் வெளியே கூடியிருந்த நிருபர்களைநோக்கி உரத்த குரலில் பேசினார்.
"ஆயுதங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசாரே கொண்டு வந்துள்ளனர். ஆனால் என்னிடமிருந்துதான்மீட்டதாகக் கூறி நாடகம் ஆடுகின்றனர். இது பொய்யான வழக்கு. போலீசார் கூறும் அனைத்தும்பொய். டி.எஸ்.பி. நாகராஜ் என்பவர் என்னை கொடுமைப்படுத்தி வருகிறார்" என்றார் கோபால்.
இதைத்தொடர்ந்து கோபால், சென்னை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டுஅடைக்கப்பட்டார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications