காஷ்மீர்: ராணுவ முகாமில் தற்கொலை தாக்குதல் முயற்சி- 13 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் இன்று நடைபெற்ற இரு வேறு சம்பவங்களில் 13 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் சுட்டுக் கொன்றனர். குப்வாரா மாவட்டத்தில் ராணுவ முகாமைத் தகர்க்க தற்கொலைப்படை தீவிரவாதிகள் செய்த முயற்சி தோல்வி அடைந்தது.
குப்வாரா மாவட்டத்தில் உள்ள "செவன் செக்டார் ராஷ்டிரிய ரைபிள்ஸ்" பிரிவின் ராணுவமுகாமுக்குள் இன்று அதிகாலை 4 மணிக்கு தற்கொலைப் படையைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள்அதிரடியாகப் புகுந்தனர்.
ஆனால் முகாமுக்குள் நுழைந்ததும் அவர்களைப் பார்த்து விட்ட ராணுவத்தினர் உடனடியாகத்துப்பாக்கியால் சுட்டு 2 தீவிரவாதிகளையும் கொன்றனர்.
இதையடுத்து ராணுவ முகாம் மீது நடக்கவிருந்த பெரும் தற்கொலைத் தாக்குதல்தவிர்க்கப்பட்டுள்ளது.
கோடை காலம் தொடங்கி விட்டதையடுத்து காஷ்மீர் மலைப் பகுதிகளில் பனி உருக ஆரம்பித்துபாகிஸ்தானிலிருந்து ஏராளமான தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் தொடர்ந்து இந்தியாவுக்குள்ஊடுருவிக் கொண்டிருக்கின்றனர்.
இதையடுத்து காஷ்மீர் முழுவதும் ராணுவத்தினரும், எல்லைப் பாதுகாப்புப் படையினரும்,போலீசாரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 26ம் தேதி ஸ்ரீநகரில் உள்ள வானொலி நிலையத்தில் தற்கொலைப் படைத் தீவிரவாதிகள்தாக்குதல் நடத்தினர். இதில் 3 தீவிரவாதிகளும், 2 பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டனர்என்பது நினைவிருக்கலாம்.
11 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை:
இதற்கிடையே தோடா மாவட்டத்தில் நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையின் 11 தீவிரவாதிகளும், 6பாதுகாப்புப் படையினரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தோடா மாவட்டத்தில் உள்ள பாரத் காட்டுப் பகுதிக்குள் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாகக் கிடைத்ததகவலையடுத்து அப்பகுதியைப் பாதுகாப்புப் படையினர் இன்று காலை 9 மணிக்கு சுற்றி வளைத்துதேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது தீவிரவாதிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தாக்குதல் நடத்துவது தொடர்பானசதித் திட்டம் தீட்டிக் கொண்டிருந்ததாகத் தெரிய வந்தது. அவர்களைச் சுற்றி வளைத்த பாதுகாப்புப்படையினர் சரணடைந்து விடுமாறு கூறினர்.
ஆனால் தீவிரவாதிகள் துப்பாக்கியால் பாதுகாப்புப் படையினரை நோக்கிச் சராமாரியாகச் சுடஆரம்பித்தனர். இதையடுத்து பாதுகாப்புப் படையினரும் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இரு தரப்பினருக்கும் இடையே பல மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. கிரனைட்குண்டுகளையும் வெடிக்கச் செய்து தீவிரவாதிகள் தாக்கினர். இந்தக் கடுமையான துப்பாக்கிச்சண்டையில் 11 தீவிரவாதிகளும், 6 பாதுகாப்புப் படையினரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட தீவிரவாதிகள் அனைவரும் பாகிஸ்தானியர்கள் என்று தெரிய வந்துள்ளது. அங்குதொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருவதால் அப்பகுதிக்கு கூடுதல் பாதுகாப்புப் படையினர்அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications