பரிதி எம்.எல்.ஏ. வெற்றி செல்லும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை:
சென்னை எழும்பூர் தொகுதியில் திமுக எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதி வெற்றி பெற்றது செல்லும்என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பில் எழும்பூர்தொகுதியில் போட்டியிட்டார் பரிதி.
அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட தமிழக முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் 86 வாக்குகள் வித்தியாசத்தில் பரிதியிடம் தோல்வி அடைந்தார்.
பரிதியின் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஜான் பாண்டியன் வழக்கு தொடர்ந்தார்."எழும்பூர் தொகுதியில் பல வாக்குச் சாவடிகளை பரிதி கைப்பற்றியதால்தான் அவரால் வெற்றி பெறமுடிந்தது. இல்லையென்றால் நான் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாகி இருப்பேன்" என்று தன் மனுவில்தெரிவித்திருந்தார் ஜான் பாண்டியன்.
இம்மனுவை விசாரித்து உயர் நீதிமன்ற நீதிபதி தங்கவேல் இன்று தீர்ப்பு வழங்கினார். அவர் தன்தீர்ப்பில்,
ஜான் பாண்டியனின் புகார் தொடர்பாக எந்தவிதமான ஆதராமும் இல்லை. எனவே அவர் மனுவைத்தள்ளுபடி செய்கிறேன். எழும்பூர் தொகுதியில் பரிதி வெற்றி பெற்றது செல்லும் என்றும்அறிவிக்கிறேன்.
மேலும் இவ்வழக்கு தொடர்பாக பரிதிக்கு ஏற்பட்டுள்ள செலவை ஈடு கட்ட அவருக்கு ஜான்பாண்டியன் ரூ.2,000 அபராதமாக வழங்க வேண்டும் என்று நீதிபதி தங்கவேல் உத்தரவிட்டார்.
இவ்வழக்கு தொடர்பாக பரிதி இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். கொலை வழக்குதொடர்பாக ஆயுள் தண்டனை பெற்றுள்ள ஜான் பாண்டியன் கோயம்புத்தூர் சிறையில்அடைக்கப்பட்டுள்ளதால் அவர் நீதிமன்றத்திற்கு வரவில்லை.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications