சேலம் சிறையில் கலவரம்: கைதி மண்டை உடைந்தது- வார்டன் மீது வழக்கு
சேலம்:
சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்தது.இதில் ஒரு கைதியின் மண்டை உடைந்தது. இது தொடர்பாக சிறை வார்டன் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சேலம் சிறையில் சுமார் 60 கைதிகள் குளிப்பதற்காகச்சென்றனர். அப்போது யார் முதலில் குளிப்பது என்பது தொடர்பாக அவர்களுக்கிடையே மோதல்ஏற்பட்டது.
அப்போது ஒரு கைதி தண்ணீர் வரும் மோட்டார் பம்ப்பை நிறுத்திவிட்டுச் சென்று விட்டார்.
இதையடுத்து கைதிகள் மோதம் தீவிரமடைந்தது. சிறிது நேரத்திலேயே பெரும் கலவரம் வெடித்தது.உடனே சிறை வார்டன் ஐயப்பன் மற்றும் சிறை ஊழியர்கள் விரைந்து வந்து கலவரத்தில் ஈடுபட்டகைதிகளை தடியடி நடத்தி விரட்டினர்.
அப்போது ஆனந்தன் என்ற கைதியை வார்டன் உருட்டுக் கட்டையால் தாக்கியுள்ளார். இதில்ஆனந்தனின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும் பல கைதிகள் பலத்த காயம்அடைந்தனர்.
இதையடுத்து சிறிது நேரத்தில் கலவரம் அடங்கியது. காயமடைந்த கைதிகளுக்கு சிறையில் உள்ளமருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனந்தன் மட்டும் மேல்சிகிச்சைக்காக சேலம்அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மேலும் சிறை வார்டன் தன்னைத் தாக்கியதாக போலீசாரிடம் ஆனந்தன் புகார் செய்தார்.இதையடுத்து ஐயப்பன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறைக் கலவரம் குறித்து தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் சிறையில் பணக்காரக் கைதிகளுக்கு சிறை ஊழியர்கள் சகல வசதிகளையும் அளித்துக்கொண்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. கைதிகள் தரும் பணத்திற்கு ஏற்ப பீடி, சிகரெட், சுருட்டு,போதை வஸ்துக்கள் மற்றும் மது ஆகியவை தாராளமாகக் கிடைப்பதாக சிறையிலிருந்துவெளியேறும் கைதிகள் புகார் கூறினர்.
இவை தங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகக் கைதிகள் அடிக்கடி மோதிக் கொள்வதும்வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications