மே 4 வரை சென்னை-சிங்கப்பூர் ஏர்-இந்தியா விமானங்கள் ரத்து
சென்னை:
பைலட்டுகள் பிரச்சனை காரணமாக சென்னை-சிங்கப்பூர் இடையே வரும் மே 4ம் தேதி வரைஅனைத்து ஏர்-இந்தியா விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சார்ஸ் நோய் பரவியுள்ள நாடுகளுக்குச் செல்ல மாட்டோம் என்பதை வலியுறுத்தி ஏர்-இந்தியாபைலட்டுகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சார்ஸ் பரவியுள்ள நாடுகளுக்குச் சென்றுவந்துள்ள விமான ஊழியர்கள் தங்களுடன் விமானத்தில் வரக் கூடாது என்றும் அவர்கள்கூறியுள்ளனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட பைலட்டுகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் உலகம் முழுவதும்செல்ல வேண்டிய பல ஏர்-இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்று காலை கடைசிநேரத்தில் சென்னை-சிங்கப்பூர் இடையே 2 ஏர்-இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.இதனால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்நிலையில் பைலட்டுகள் பிரச்சனை மேலும் தீவிரமாகியுள்ளதைத் தொடர்ந்து மே 4ம் தேதி வரைசென்னை-சிங்கப்பூர் இடையிலான அனைத்து ஏர்-இந்தியா விமானங்களும் ரத்து செய்யப்படுவதாகஅந்நிறுவனம் அறிவித்துள்ளது.
சிங்கப்பூர் தவிர சென்னையிலிருந்து வேறு சில நாடுகளுக்குச் செல்லும் ஏர்-இந்தியாவிமானங்களும் மே 4ம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன.
கை கொடுத்த இந்தியன் ஏர்லைன்ஸ்:
ஏர்-இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து சென்னை-சிங்கப்பூர் இடையேஇந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை சிங்கப்பூரிலிருந்து ஏர்-இந்தியா விமானத்தில் வரவேண்டிய 311 பயணிகள்இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னைக்கு வந்து சேர்ந்தனர்.
சிங்கப்பூர் தவிர வேறு பல தெற்காசிய நாடுகளுக்கும் விமானங்களை இயக்கி வரும் இந்தியன்ஏர்லைன்ஸ் பைலட்டுகள், சிங்கப்பூரில் மட்டும் எந்தக் காரணத்தைக் கொண்டும் இரவில் தங்கமாட்டோம் என அறிவித்துள்ளனர். இதை இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் ஏர்-இந்தியா விமான பைலட்டுகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாகக்கூறியுள்ள இந்தியன் ஏர்லைன்ஸ் பைலட்டுகள், ஆனால் போராட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம்என அறிவித்துள்ளனர்.
மேலும் 18 பைலட்டுகள் சஸ்பெண்ட்:
இதற்கிடையே மேலும் 18 பைலட்டுகளை ஏர்-இந்தியா நிறுவனம் சஸ்பெண்ட் செய்துள்ளது.இதையடுத்து ஏர்-இந்தியா நிறுவனம் சஸ்பெண்ட் செய்துள்ள பைலட்டுகளின் எண்ணிக்கை 45ஆகஅதிகரித்துள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications