சார்ஸ் நோயை தடுக்க டெல்லியில் சிறப்பு யாகம்
டெல்லி:
சார்ஸ் நோய் பரவாமல் தடுக்கப்பட வேண்டும் என்று வேண்டி டெல்லியில் சிறப்பு யாகம் ஒன்றுநடத்தப்பட்டது.
உலகையே அச்சுறுத்தி வரும் சார்ஸ் நோய்க்கு இதுவரை சுமார் 350 பேர் உயிரிழந்துள்ளனர்.ஆனாலும் இதுவரை இந்நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில் சார்ஸ் நோய் பரவாமல் தடுப்பதற்காக டெல்லியில் கடவுளை வேண்டி சிறப்பு யாகம்ஒன்று நடத்தப்பட்டது. யாகத் தீயை மூட்டி அர்ச்சகர்கள் சிறப்பு வேள்விகளை நடத்தினர்.
சார்ஸ் நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத காரணத்தால், டாக்டர்களை நம்புவதை விடநாங்கள் கடவுளிடம் சரணடைந்துள்ளோம் என்று இந்த யாகத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள்தெரிவித்தனர்.
இந்தியாவில் 9 பேருக்கு சார்ஸ்:
இதற்கிடையே இந்தியாவில் இதுவரை மொத்தம் 9 பேருக்கு சார்ஸ் நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில் 5 பேர் முற்றிலும் குணமடைந்து விட்டனர்.
முதன் முதலில் கோவாவில்தான் ஒருவருக்கு சார்ஸ் நோய் தாக்கியிருப்பது தெரிய வந்தது.ஆனாலும் அவர் அடுத்த சில நாட்களில் குணமடைந்தார்.
இந்நிலையில் நேற்று வரை மேலும் 8 பேருக்கு சார்ஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையே புனேயில் சார்ஸ் நோயால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4சார்ஸ் நோயாளிகள் முழுவதுமாகக் குணமடைந்து விட்டனர். இன்று காலை அவர்கள்மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கொல்கத்தா விமான நிலையத்தில் மற்றொரு நபர் சார்ஸ் நோய் அறிகுறிகளுடன் வந்துஇறங்கினார். கம்போடியாவிலிருந்து பாங்காக் வழியாக கொல்கத்தா வந்து சேர்ந்த அவருக்குக் கடும்காய்ச்சல், இருமல் இருந்தது.
இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு சார்ஸ் நோய் இருக்கிறதா என்பது குறித்துடாக்டர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
நேற்று முன்தினம்தான் ஜாமில் அகமது என்ற நபர் சார்ஸ் நோய்க்கான அறிகுறிகளுடன்ஹாங்காங்கிலிருந்து கொல்கத்தா வந்து சேர்ந்தார். அவருடைய ரத்த சாம்பிள்கள் புனேக்குஅனுப்பப்பட்டுள்ளன. அவருக்கு சார்ஸ் இருக்கிறதா என்பது குறித்து இன்னும் அறிக்கைதயாராகவில்லை.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications