பள்ளிகளில் தமிழ் கட்டாயமாகும்: ஜெ
சென்னை:
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும் தமிழ் கட்டாய பாடமாக்கப்படும்என்று முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் நேற்று போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்நடைபெற்றது.
அப்போது பேசிய பாமக தலைவர் ஜி.கே. மணி, தமிழக எல்லைப் புறத்தில் உள்ள சில பகுதிகளில்தமிழ் கட்டாயப் பாடமாக இல்லை என்பதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்என்றார்.
அதற்குப் பதிலளித்த ஜெயலலிதா, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும்தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படும் என்று உறுதியளித்தார்.
தெலுங்கில் "மாட்லாடிய" ஜெயலலிதா:
இதற்கிடையே தமிழக சட்டசபையில் தெலுங்கில் பேசிய உறுப்பினரின் கேள்விக்கு ஜெயலலிதாதெலுங்கிலேயே பதில் அளித்தார்.
ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ. கோபிநாத் கன்னடத்தில் பேசத் தொடங்கினார். பிறகு தமிழுக்கு மாறியஅவர், தமிழில் தொடர்ந்து பேசத் தெரியாததால் தெலுங்கில் பேச ஆரம்பித்தார்.
தனது தொகுதியில் தெலுங்கு அகாடமி அமைக்க அரசு உதவ வேண்டும் என்று தெலுங்கில்கோரிக்கை விடுத்தார் அவர். அதற்கு ஜெயலலிதா தெலுங்கிலேயே பதிலளித்தார். இதுபோன்றமுக்கியமான விஷயங்கள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்துதான் முடிவெடுக்க முடியும்என்று அவர் கூறினார்.
ஓசூர் எம்.எல்.ஏ. 3 மொழிகளில் பேச, அவருக்கு ஜெயலலிதா தெலுங்கில் பதிலளித்தபோதுஅவையில் சிரிப்பலை எழுந்தது. பல அதிமுக உறுப்பினர்கள், தங்களது தலைவியின் தெலுங்குப்புலமையைப் பார்த்து ஆச்சரியத்தில் அமர்ந்திருந்தனர்.
ஜெயலலிதாவுக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சரளமாக பேச,எழுத வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications