பப்பாளி சாப்பிட ஜெ. அறிவுரை
சென்னை:
சார்ஸ் நோயிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் தினமும் பப்பாளி, மிளகு மற்றும் துளசிஆகியவற்றைச் சாப்பிட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று சார்ஸ் நோய் தொடர்பாக பா.ஜ.க. உறுப்பினர் அரசன் உள்ளிட்டஎம்.எல்.ஏக்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். சார்ஸ் நோயிலிருந்து தப்பிக்கதமிழக மக்கள் அனைவருக்கும் இலவச முகமூடிகளை அரசு வழங்க வேண்டும் என்று அரசன்கோரிக்கை விடுத்தார்.
அப்போது அவருக்குப் பதிலளித்துப் பேசிய ஜெயலலிதா, சார்ஸ் நோயிலிருந்து தப்பிக்க வேண்டும்என்றால் அனைவரும் பப்பாளிப் பழத்தை அதிகமாகச் சாப்பிட வேண்டும்.
மேலும் துளசி, மிளகு ஆகிய மருத்துவக் குணம் மிகுந்த உணவுப் பொருள்களுக்கும் சார்ஸ்நோயைத் தடுக்கும் வல்லமை உண்டு.
எனவே தினமும் பப்பாளி, துளசி, மிளகு ஆகியவற்றைச் சாப்பிட்டு வந்தால் சார்ஸ் நோயிலிருந்துதப்பிக்கலாம் என்றார் ஜெயலலிதா.
இந்தியாவில் மெதுவாகவே பரவும்: செம்மலை
தமிழகத்தில் சார்ஸ் நோய் பரவலைத் தடுக்க உயர் மட்டக் குழு அமைக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் செம்மலை தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் அவர் பேசுகையில், தமிழகத்தில் சார்ஸ் நோய் பரவலைத் தடுப்பது குறித்துவிவாதிக்க உயர் மட்டக் குழு அமைக்கப்படும். இந்தக் குழுவில் விமான நிலையங்கள்,துறைமுகங்கள், தேசிய தொற்று நோய் கழகம், இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம், அரசு சாராதன்னார்வ நிறுவனங்கள் ஆகியவை அங்கம் வகிக்கும்.
சார்ஸ் நோயைத் தடுக்க அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் சிறப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன. நோய் தாக்கினால் பயன்படுத்த வேண்டிய முகமூடிகளும் தயார் நிலையில்வைக்கப்பட்டுள்ளன.
குளிர் அதிகமாக உள்ள நாடுகளில்தான் சார்ஸ் நோய்க் கிருமிகள் மிகவும் வேகமாகப் பரவும்.இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் இக்கிருமிகள் மெதுவாகத்தான் பரவும். மேலும் சார்ஸ் நோயைஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டால் குணமாக்குவது எளிது. எனவே சார்ஸ் குறித்துபொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை.
வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை டாக்டர்களின் சிறப்பான சிகிச்சை காரணமாக சார்ஸ் நோயால்பாதிக்கப்பட்ட ஏழுமலை என்ற டிரைவர் முழுமையாகக் குணமடைந்துள்ளார் என்றார் செம்மலை.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications