""தமிழ்த் தாயே!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டசபையில் பா.ஜ.க. உறுப்பினர் முரளீதரனின் பாராட்டு "ஐஸ் "மழையில் முதல்வர்ஜெயலலிதாவும் அதிமுகவினரும் குளிர்ந்து போயினர்.

உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டசபையில் நேற்று நடந்தது.அப்போது முரளீதரன் பேசுகையில்,

பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடமாக்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது மிகுந்தமகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

இதன் மூலம் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட என்னைப் போன்றவர்களுக்கு தமிழ் படிக்கும்வாய்ப்பை முதல்வர் ஜெயலலிதா ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இந்தக் காரணத்திற்காக அவரை"தமிழ்த் தாய்" என்றே அழைக்கலாம்.

இது மட்டுமல்லாது கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டம், கோவில் அன்னதானத் திட்டம் என பலபுரட்சிகரமான திட்டங்களை மிகுந்த துணிவுடன் நடத்தி வருகிறார். இதனால் ஜெயலலிதாவை"மெகா முதல்வர்" என்று அழைப்பதுதான் பொருத்தமானதாக இருக்கும்.

அதிமுகவினர் மட்டும்தான் இதுவரை முதல்வரை "அம்மா" என்று அழைத்து வந்தார்கள். தெலுங்குமீடியத்தில் படிப்போருக்கு தெலுங்கில் கேள்வித் தாள், தெலுங்கு அகாடமி என அறிவித்து தெலுங்குமக்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்துள்ள உங்களை நாங்களும் இனிமேல் "அம்மா, அம்மா"என்றே அழைப்போம் என்று முரளிதரன் பேசி முடித்தபோது, அதிமுக எம்.எல்.ஏக்களின் "மேசைத்தட்டல்" அடங்க வெகு நேரமாயிற்று.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+