சென்னை மாநகராட்சி கூட்டத்தில் கூச்சல், குழப்பம்: காங். கவுன்சிலர்கள் வெளிநடப்பு
சென்னை:
மாநகராட்சி வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்தபோது தாங்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்துசென்னை மாநகராட்சிக் கூட்டத்திலிருந்து காங்கிரஸ் கவுன்சிலர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.
சென்னை மாநகராட்சி அமைந்துள்ள ரிப்பன் கட்டடத்தில் தங்களுக்குத் தனி அறை ஒதுக்கப்படவேண்டும் என்று இதில் உறுப்பினர்களாக உள்ள 11 காங்கிரஸ் கவுன்சிலர்களும் கோரிக்கைவிடுத்தனர்.
சென்னை மாநகர துணை மேயர் கராத்தே தியாகராஜன் மற்றும் மாநகராட்சி கமிஷனர் கலைவாணன்ஆகியோரிடம் இது தொடர்பாக கோரிக்கை மனுவையும் அவர்கள் கொடுத்திருந்தனர்.
ஆனால் மாநகராட்சி நிர்வாகம் இதைக் கண்டு கொள்ளாததைத் தொடர்ந்து நேற்று ரிப்பன் கட்டடவளாகத்தில் காங்கிரஸ் கவுன்சிலர்கள் உண்ணாவிரதம் இருக்க முயற்சித்தனர். ஆனால் அவர்களைப்போலீசார் தடுத்து கைது செய்தனர்.
முன் கூட்டியே இந்தப் போராட்டம் குறித்து அறிவிக்கவில்லை என்று கூறி அவர்களைக் கைது செய்தபோலீசார் பின்னர் அவர்களை மாலையில் விடுவித்தனர்.
இந்நிலையில் இன்று காலை சென்னை மாநகராட்சியின் கூட்டம் தொடங்கியது. அப்போது,காங்கிரஸ் உறுப்பினர் ராயபுரம் மனோ பேசுகையில், காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு மாநகராட்சிவளாகத்தில் உரிய அறை ஒதுக்கித் தருமாறு பலமுறை கோரப்பட்டு அதற்கு எந்தவித பதிலும்கிடைக்கவில்லை.
இதைக் கண்டித்துதான் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. உண்ணாவிரதம்குறித்து கடந்த 26ம் தேதியே தெரிவிக்கப்பட்டு விட்டது. இருப்பினும் காங்கிரஸ் கவுன்சிலர்களைப்போலீசார் கைது செய்தது மரபு மீறிய செயலாகும்.
இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த ஆட்சியில் எதிர்க் கட்சி உறுப்பினர்கள்மதிக்கப்படுவதில்லை. அவர்களுடைய கோரிக்கைக்கும் மரியாதையே இல்லாமல் போய்விட்டதுஎன்று கூறினார் மனோ.
மனோ பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் குரல் எழுப்பினர். பதிலுக்குஅவர்களை நோக்கி காங்கிரஸ் உறுப்பினர்களும் சத்தம் போட்டனர். இதையடுத்து அவையில்பெரும் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது.
இந்நிலையில் "ஆளுங்கட்சி அராஜகம் ஒழிக" என்று கோஷம் போட்டவாறே காங்கிரஸ்கவுன்சிலர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதற்கிடையே சென்னை மாநகராட்சி திமுக தலைவரான மலையன் நிருபர்களிடம் பேசுகையில்,காங்கிரஸ் கவுன்சிலர்களின் நியாயமான இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டியதுமாநகராட்சியின் கடமை என்றார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications