சார்சுக்கு முதல் இந்தியர் பலி: சிங்கப்பூரில் இறந்தார்
ஜெய்ஸ்ரீ பாலசுப்பிரமணியம்
பாங்காங்:
சிங்கப்பூரில் சார்ஸ் நோய்க்கு இந்திய டாக்சி டிரைவர் பலியாகியுள்ளார்.
உலகில் சார்ஸ் நோய்க்குப் பலியாகியுள்ள முதல் இந்தியர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 43 வயதானஅவர் கடந்த 11 தினங்களுக்கு முன் இறந்ததாக சிங்கப்பூர் நலத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆனால், அவரது பெயர் விவரத்தை வெளியிடவில்லை. முதலில் இவர் சாதாரண வைரஸ் காய்ச்சலால் இறந்ததாகக்கருதப்பட்டது. ஆனால், அவரது உடலில் நடத்தப்பட்ட போஸ்ட் மார்ட்டத்தில் அவருக்கு சார்ஸ் நோய் தாக்குதல்இருந்தது தெரியவந்துள்ளது.
கடந்த 11ம் தேதி அந்த டிரைவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவரிடம் சென்றுகாட்டினர். அவருக்கு மருந்துகள் கொடுத்த டாக்டர் காய்ச்சல் இருந்தால் 3 நாட்கள் கழித்து வரச் சொன்னார்.மருந்து சாப்பிட்டும் காய்ச்சல் குறையாததால் 14ம் தேதி அவர் மீண்டும் அதே டாக்டரிடம் வந்தார்.
இதையடுத்து சிங்கப்பூரின் சாங்கி மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெறுமாறு அவரை மருத்துவர் அனுப்பிவைத்தார். இதைத் தொடர்ந்து அந்த டிரைவர் சாங்கி மருத்துவமனையின் எமர்ஜென்சி பிரிவில் சேர்ந்தார்.
அங்கு அவருக்கு ரத்தப் பரிசோதனை நடந்தது. ஆனால், அதில் எந்த விவரமும் தெரிய வரவில்லை. இதையடுத்துசில மருந்துகளைக் கொடுத்த மருத்துவமனை டாக்டர்கள் அவரை டிஸ்சார்ஜ் செய்தனர்.
ஆனால், வீட்டுக்குத் திரும்பியும் அவருக்கு காய்ச்சல் குறையவில்லை. கடந்த 19ம் தேதி கடும் காய்ச்சலால் அவர்மயங்கி விழுந்தார். அவரால் மூச்சுவிடவும் முடியவில்லை. இதையடுத்து அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால், அங்கு அவர் இறந்துவிட்டார்.
இதனால் அவரது உடலை போஸ்ட் மார்ட்டம் செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
கடந்த 20ம் தேதி அவரது உடலில் போஸ்ட் மார்ட்டம் நடந்தது. அப்போது நுரையீரல் கடுமையாகபாதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவரது திசுக்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரது உடலில்சார்ஸ் நோயை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த டிரைவரின் வீட்டினர், நண்பர்கள் 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூரில் இதுவரை 23 பேர் சார்ஸ் நோய்க்குப் பலியாகியுள்ளனர். மேலும் 201 பேர் நோயால் பாதிக்கப்பட்டுமருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 3.000 பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுவைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 10 பேர் சார்ஸ் நோயால் தாக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில்சிங்கப்பூரில் பணியாற்றிய வேலூரைச் சேர்ந்த ஏழுமலையும் ஒருவர்.
புனேயில் இன்று மேலும் 9 பேரும், பெங்களூரில் 5 பேரும் சார்ஸ் நோய்க்கான அறிகுறிகளுடன்மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியாவில் சார்ஸ் நோய் இருப்பதாகசந்தேகிக்கப்படுபவர்ளின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
புனேயில் இன்று சார்ஸ் நோய் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள 9 பேருமே சித்தார்த் மருத்துவமனையில் சார்ஸ்நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்ஸ் நோயால் தாக்கப்பட்டு இம்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த 4 பேர், 2 நாட்களுக்கு முன்புதான் நோயிலிருந்து முற்றிலும்குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் அவர்களுக்குச் சிகிச்சை அளித்து வந்த நர்ஸ்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்குசார்ஸ் நோய் தாக்கியுள்ளதாகத் தெரிகிறது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications