பா.ஜ.கவினரை விரட்டி அடித்த கிராம மக்கள்

Subscribe to Oneindia Tamil

காரைக்குடி:

சிவகங்கை அருகே உள்ள ஒரு கிராமத்தில் பா.ஜ.க. கட்சிக் கொடி ஏற்றப்படுவதற்கு அந்தக் கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அக்கட்சியின் கொடியேற்று விழா ஒத்திவைக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கன்னங்குடி கிராமத்தில் எந்தவொரு அரசியல்கட்சியும் கொடி மரம் கட்டவோ, கொடிகளைப் பறக்க விடவோ கூடாது என்று ஊர் கட்டுப்பாடுஉள்ளது. இந்தக் கட்டுப்பாடு இதுவரை கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கன்னங்குடி கிராமத்தில் பா.ஜ.க. கொடியேற்று விழா நடைபெறும் என்றுபா.ஜ.கவினர் சமீபத்தில் அறிவித்திருந்தனர். மாநில பா.ஜ.க. துணைத் தலைவரும், காரைக்குடிஎம்.எல்.ஏவுமான ராஜா கொடியேற்றி வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் இதற்கு கன்னங்குடி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தங்களைமதிக்காமல், பா.ஜ.க.வினர் இப்படி அறிவிப்பு வெளியிட்டதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துதங்களது வீடுகளில் அவர்கள் கறுப்புக் கொடிகளை ஏற்றி வைத்தனர்.

மேலும் அந்தக் கிராம மக்கள் தங்கள் வீடுகளையும் பூட்டிக் கொண்டு உள்ளேயே இருந்துகொண்டனர். யாரும் வெளியில் வரவில்லை. இதனால் கிராமமே வெறிச்சோடிக் காணப்பட்டது.

இதையும் மீறி ஊருக்குள் நுழைந்தால் அடித்து விரட்டுவோம் என்று அறிவித்தனர். கன்னங்குடிகிராமத்தில் இவ்வாறு அசாதாரணமான சூழ்நிலை காணப்பட்டதைத் தொடர்ந்து அங்கு ஏராளமானஆயுதப் படைப் போலீசார் குவிக்கப்பட்டனர்.

மேலும் கொடியேற்று விழாவுக்காக அந்தக் கிராமத்திற்குள் வர முயன்ற ராஜாவை கிராமத்திற்குவெளியிலேயே போலீசார் தடுத்து விட்டனர். இதனால் ராஜா உள்ளிட்ட பா.ஜ.கவினர்ஏமாற்றத்துடன் திரும்பினர். கொடியேற்று விழாவும் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் நிருபர்களிடம் பேசிய ராஜா, ஒரு ஊரில் கட்சிக் கொடியை ஏற்ற மக்கள் தடுக்க நினைப்பதுகடும் கண்டனத்திற்கு உரியது என்றார்.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+