"நக்கீரன்" அலுவலகம், கோபாலின் சென்னை, அருப்புக் கோட்டை வீடுகளில் போலீஸ் திடீர் ரெய்ட்
சென்னை:
"நக்கீரன்" பத்திரிக்கை அலுவலகத்திலும், அதன் ஆசிரியர் கோபாலின் சென்னை, அருப்புக்கோட்டை வீடுகளிலும் இன்று காலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனைநடத்தினர். அந்த பத்திரிக்கையின் இணை ஆசிரியர் காமராஜ் வீட்டிலும் சோதனை நடந்தது.
வாரண்ட் ஏதும் இல்லாமல் அவர்கள் சோதனை நடத்தியுள்ளனர். சோதனையின்போது போலீசார்தவிர வேறு யாரையும் நக்கீரன் அலுவலகத்துக்குள் அனுமதிக்கவில்லை.
வீரப்பன் விவகாரத்தில் கோபால் மீது பல வழக்குகளைப் பதிவு செய்த தமிழக போலீசார் அவரைபொடா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சமீபத்தில் சத்தியமங்கலம் காட்டுப் பகுதிக்கு கோபாலை அழைத்துச் சென்ற போலீசார், அவர்அடையாளம் காட்டிய இடத்திலிருந்து கைப்பற்றியதாகக் கூறி துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைபொடா நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
ஆனால், நான் எந்த இடத்தையும் காட்டவில்லை என நீதிமன்றத்தில் கோபால் தெரிவித்துள்ளனர்.அவர் இப்போது சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை ஜாபர்கான் சாலையில் உள்ள "நக்கீரன்" பத்திரிக்கைஅலுவலகத்திற்கு திடீரென இன்று காலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வந்திறங்கினர். டி.எஸ்.பியானநாகராஜன் தலைமையில் சென்ற 20 போலீசார் அலுவலகத்தில் நுழைந்தனர்.
அவர்களிடம் வாரண்ட் இருக்கிறதா என்று கேட்ட கோபாலின் வழக்கறிஞர் பரசுராமனுக்குபோலீசார் பதில் ஏதும் தரவில்லை. அலுவலகத்திற்குள் சென்ற போலீசார் அதன் கதவுகளைஉள்பக்கமாக இழுத்து மூடிக் கொண்டு சென்று சோதனை நடத்தினர்.
அலுவலத்தில் இருந்த "நக்கீரன்" ஊழியர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.மேலும் வழக்கறிரைக் கூட உள்ளே விடவில்லை. இதனால், அவர்களே ஏதாவது ஆயுதத்தை உள்ளேவைத்துவிட்டு அதை நக்கீரன் அலுவலகத்தில் கைப்பற்றியதாக பொய் சொல்லவும் வாய்ப்புள்ளதாகவழக்கறிஞர் பரசுராமன் குற்றம் சாட்டினார்.
அங்கு தொடர்ந்து போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த ரெய்டுக்கு தலைமை வகித்துள்ளடி.எஸ்.பி. நாகராஜன், சி.பி.சி.ஐ.டி. தலைமையகத்தில் வைத்து தன்னை கொடுமைப்படுத்தியதாககோபால் குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வீடுகளிலும் சோதனை:
நக்கீரன் அலுவலகத்தில் சோதனை நடந்த அதே நேரத்தில் சென்னை மற்றும் அருப்புக்கோட்டையில்உள்ள கோபாலின் வீடுகளிலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்தினர்.
சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள கோபாலின் வீட்டில் 6 போலீசார் சோதனை இடச் சென்றபோதுஅங்கு அவருடைய மனைவியும் குழந்தைகளும் இருந்தனர்.
மேலும் கோபாலின் சொந்த ஊரான அருப்புக்கோட்டையில் உள்ள அவருடைய வீட்டிலும் அதேநேரத்தில் போலீசார் சோதனை நடத்தினர். கோபாலின் தந்தை குறித்து அவரது சகோதரியிடம்போலீசார் கேள்விகள் கேட்டதாகத் தெரிகிறது.
இணை ஆசிரியர் வீட்டிலும்...
அதே போல "நக்கீரன்" பத்திரிக்கையின் இணை ஆசிரியரான காமராஜின் வீட்டிலும் போலீசார்இன்று சோதனை நடத்தச் சென்றனர்.
அப்போது அவர் அலுவலகத்தில் இருந்ததால், அவருடைய வீட்டு வாசலில் இருந்தவாறேகாமராஜைத் தொடர்பு கொண்டு "உங்கள் வீட்டில் சோதனை நடத்தப் போகிறோம்" என்று கூறியபோலீசார், "உடனே வராவிட்டால் நாங்கள் வீட்டின் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே போய்சோதனை நடத்துவோம்" என்றும் கூறினர்.
இதையடுத்து "நக்கீரன்" அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் அனுமதிபெற்றுக் கொண்டு வீட்டுக்கு விரைந்தார் காமராஜ்.
அதன் பின்னர் அவருடைய வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர்.
கோபாலுக்கு ஜாமீன்:
இதற்கிடையே அதிரடிப்படைப் போலீஸ் உளவாளி ராஜாமணி கொலை செய்யப்பட்ட வழக்கில்கோபாலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி ஈரோடு செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜாமணி கடந்த 1998ம் ஆண்டு மே 5ம் தேதி வீரப்பனின் சத்தியமங்கலம் காட்டில் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். இந்தக் கொலை தொடர்பாக சந்தனக் கடத்தல் வீரப்பன், கோபால் உள்பட9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி ஈரோடு நீதிமன்றத்தில் கோபால் மனுதாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி திருநாவுக்கரசு, கோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்வழங்கி உத்தரவிட்டார்.
சென்னையில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் தினமும் கோபால் கையெழுத்துப் போட வேண்டும் என்றுநீதிபதி உத்தரவிட்டார்.
-->












Click it and Unblock the Notifications