கடலூரில் கள்ளச் சாராயத்துக்கு 4 பேர் பலி: 6 பேர் உயிர் ஊசல்- மாமூல் வாங்கிய போலீசே காரணம்

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே கள்ளச் சாராயம் குடித்த 4 பேர் உயிரிழந்தனர். இதில் ஒருவர் பெண்.மேலும் 6 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பேரின்நிலைமை மிக மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மீனவபுரிம் என்ற கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்தது. சமீபத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதுசட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, கள்ளச் சாராயத்தை போலீசார் கட்டுப்படுத்திவிட்டதாகக் கூறிஅவர்களைப் பாராட்டினார்.

இந் நிலையில் இந்தச் சாவுகள் நடந்துள்ளன. இந்த கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் போலீசாருக்குத்தெரிந்தே சாராயம் காய்ச்சி விற்று வந்துள்ளார். போலீசாருக்கு மாமூல் கொடுத்து வந்ததால் அவரை சாராயம்காய்ச்ச போலீசார் அனுமதித்ததாகத் தெரிகிறது.

அவரிடம் நேற்றிரவு வழக்கம்போல் பலரும் சாராயம் குடித்தனர். அவர்களுக்கு இன்று அதிகாலை வாந்தியும்மயக்கமும் ஏற்பட்டது. பலருக்கு கண் பார்வையும் மங்கியது.

இதையடுத்து அவர்கள் பெண்ணாடம், விருதாச்சலம், திட்டகுடா ஆகிய அரசு மருத்துவமனைகளில்சேர்க்கப்பட்டனர். ஆனால், இதில் பஞ்சவர்ணம் என்ற 60 வயது முதியவரும், ஆறுமுகம் என்பவரும் சிகிச்சைபலனின்றி இறந்தனர். மேலும் ஒரு பெண்ணும் உயிரிழந்தார். இவர்கள் காலையில் இறந்தனர். பிற்பகலில் மேலும்ஒருவர் உயிரிழந்தார்.

இவர்கள் தவிர மேலும் 6 பேர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர். இவர்களில் 2 பேர்பிழைப்பது கஷ்டம் என்று தெரிகிறது. இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் உயரலாம்.

சம்பவம் குறித்து அறிந்கவுடன் துணை ஐ.ஜி. விஜய்குமார் இன்று மீனவபுரம் கிராமத்துக்கு வந்தார்.மருத்துவமனைகளுக்கும் சென்று அங்கு சேர்க்கப்பட்டுள்ளவர்களையும் பார்த்தார்.

சாராய வியாபாரியான ராஜேந்திரன் தலைமறைவாகிவிட்டார். அவரைப் பிடிக்க தனிப் போலீஸ்அமைக்கப்பட்டுள்ளது.

2001ம் ஆண்டு நவம்பரில் இதே கடலூர் மாவட்டத்தில் கள்ளச் சாராயத்துக்கு 50 பேர் பலியாயினர். அதே ஆண்டுடிசம்பரில் சென்னை அருகே கள்ளச் சாராயம் குடித்து 35 பேர் பலியாயினர்.

இதையடுத்து கள்ளச் சாராய வியாபாரிகளிடம் மாமூல் வாங்குவதை போலீசார் கொஞ்சம் நிறுத்தியிருந்தனர்.

இப்போது மீண்டும் அவர்களிடம் போலீசார் கையை ஏந்த ஆரம்பித்துவிட்டதையே இந்த கள்ளச் சாராய சாவுகள்நிரூபப்பதாக பெண்ணாடம் பகுதி மக்கள் கூறுகின்றனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+