"காஷ்மீர் தீவிரவாதிகளிடம் ரசாயன ஆயுதங்கள்"
ஜம்மூ:
காஷ்மீர் தீவிரவாதிகளிடம் ரசாயன ஆயுதங்கள் இருப்பதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நார்த்தர்ன் கமாண்ட் ராணுவ தலைமை அலுவலகத்தின் லெப்டினன்ட் கர்னல் சிங்நிருபர்களிடம் கூறுகையில்,
காஷ்மீரில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தீவிரவாதிகளிடம் ரசாயனஆயுதங்கள் இருப்பதாக உளவுத் துறை மூலம் எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
கடந்த 2, 3 மாதங்களாகவே இங்கு நடமாடிக் கொண்டிருக்கும் தீவிரவாதிகளிடம் சந்தேகத்திற்குஇடமளிக்கும் வகையிலான கன்டெய்னர்கள் காணப்படுவதாக உளவுத் துறை வட்டாரங்கள்தெரிவித்துள்ளன.
மேலும் விஷ வாயுக்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து தீவிரவாதிகள் அடிக்கடிபேசிக் கொள்வதாகவும் உளவுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ரசாயான மற்றும் உயிரியல் ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளில் சிக்கியுள்ளதாக கடந்த சிலநாட்களாக அமெரிக்கா கவலை தெரிவித்து வரும் நிலையில் தற்போது காஷ்மீர் தீவிரவாதிகள்ரசாயன ஆயுதங்கள் வைத்திருப்பதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது என்றார் சிங்.
வி.ஐ.பிக்களுக்கு தீவிரவாதிகள் குறி:
இதற்கிடையே நாட்டிலுள்ள வி.ஐ.பிக்கள் மற்றும் மிக முக்கியமான கட்டடங்கள், சின்னங்கள்ஆகியவற்றையே தீவிரவாதிகள் குறி வைத்தள்ளதாக உளவுத் துறை வட்டாரங்கள்தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக இன்று ராஜ்ய சபாவில் பேசிய உள்துறை அமைச்சர் ஐ.டி. சுவாமி, நாட்டில் உள்ளஅனைத்து வி.ஐ.பிக்களுக்கும் போதுமான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்து.
இவ்வாறு பாதுகாப்பு அளிக்கப்படும்போது பொதுமக்களுக்கு நிறைய இடையூறுகள்ஏற்படுவதாகவும் எங்களுக்குப் புகார்கள் வந்துள்ளன. எனவே மக்களுக்கு இடையூறு ஏற்படுத்ததாதவகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பாதுகாப்புஏஜென்சிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பின்னர் பேசிய உள்துறை இணை அமைச்சர் ஹரின் பாதக், சமீபத்தில் டெல்லி ரயில் நிலையத்தில்கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டுகள் உளவுத் துறையின் தகவல்களை உறுதி செய்துள்ளன.
இதையடுத்து தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.முக்கிய செக் போஸ்ட்டுகளிலும் கண்காணிப்புப் பணிகளைப் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்என்றார் பாதக்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications