பொடாவுக்கு எதிராக வைகோ வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு
டெல்லி:
பொடா சட்டத்தின் 21வது பிரிவை நீக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மதிமுகபொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்புஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வைகோ தவிர தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன், "நக்கீரன்" ஆசிரியர் கோபால்உள்ளிட்ட சிலரும் பொடா சட்டத்தை எதிர்த்து வெவ்வேறு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
அரசியல் சட்டப்படி பொடா சட்டம் செல்லத்தக்கது அல்ல என்றும் இந்தச் சட்டம் அடிப்படை மனிதஉரிமைகளையும், பேச்சு சுதந்திரத்தையும் பறிக்கக் கூடியது என்றும் அவர்கள் தங்கள் மனுக்களில்குறிப்பிட்டிருந்தனர்.
அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்ற நீதிபதி ராஜேந்திர பாபு மற்றும் நீதிபதி மாத்தூர ஆகியோர்கொண்ட பெஞ்ச் விசாரித்தது. கடந்த மூன்று வாரங்களாக அனைவருடைய வழக்கறிஞர்களும்தங்கள் வாதங்களை முன் வைத்து வாதாடினர்.
தமிழகத்தில் பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டது தவறு என்று பதில் மனு தாக்கல்செய்துள்ள மத்திய அரசு, ஆனாலும் அரசியல் சட்டப்படி பொடா சட்டம் செல்லும் என்றும்கூறியுள்ளது.
உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள நெறிமுறைகளின் படியே பொடா சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதால்இந்தச் சட்டம் செல்லும் என்று மத்திய அரசின் சார்பில் வாதாடிய அட்டர்னி ஜெனரல் சோலிசொராப்ஜி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் ஒரு தீவிரவாத இயக்கத்தை ஆதரித்துப் பேசுவதால் மட்டுமே அது பொடா சட்டத்தைமீறுவதாக அர்த்தம் ஆகாது என்றும் சொராப்ஜி வாதாடினார்.
இதேபோல் மற்ற வழக்கறிஞர்களும் தங்கள் மனுதாரர்களுக்கு ஆதரவாக வாதாடினர். அனைத்துத்தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களும் நேற்றுடன் முடிவடைந்தன.
இதையடுத்து இந்த மனுக்கள் தொடர்பான தீர்ப்பை மறு தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள்ஒத்திவைத்தனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications