கோடை மழை: மகிழ்ச்சியில் மாவட்டங்கள்- வறட்சியில் சென்னை!
சென்னை:
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து 3 நாட்களாக கோடை மழை பெய்து மக்களைக்குளிர்வித்து வருகிறது.
தமிழகம் முழுவதிலும் வெயில் வறுத்தெடுத்து வந்தாலும், மறுபக்கம் கோடை மழையும் பெய்துமக்களை சந்தோஷப்படுத்தி வருகிறது.
மதுரை, சேலம், திருச்சி, தேனி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, விருதுநகர், காஞ்சிபுரம், சிவகங்கைஎன பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து 3 நாட்களாக கோடை மழை பெய்துவருகிறது.
தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், வைகை அணையின்நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து தற்போது 32 அடியை எட்டியுள்ளது. பெரியகுளத்தில் பெய்தமழையால் வராக நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மதுரையில் நேற்று மாலை ஒரு மணி நேரம் நல்ல மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளானபெரியார் பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்துபாதிக்கப்பட்டது.
இதேபோல காஞ்சிபுரத்தில் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதில் பல்வேறு பகுதிகளில்மரங்கள் உடைந்து விழுந்ததில் மின் கம்பிகள் அறுந்தன. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி, சேலம், கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மற்ற மாவட்டங்களிலும் தொடர்ந்து நல்லமழை பெய்து வருகிறது.
சென்னையில் வெயிலோ வெயில்:
மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வரும் வேளையில், சென்னையில் மட்டும் வெயில்வறுத்தெடுத்து வருகிறது.
தினமும் இரவு 7 மணி வரை வெப்பத்தின் கொடுமையால் சென்னை மக்கள் கடும் அவதிஅடைந்துள்ளனர்.
இருப்பினும் கடந்த 2 நாட்களாக மாலையில் மேகங்கள் கருத்து மழை வருவது போலத் தோன்றியது.ஆனாலும் அண்டை மாவட்டங்களில் மட்டுமே மழை பெய்தது. சென்னையில் ஒரு சொட்டு மழைகூடப் பெய்யவில்லை.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications