அடச்சீ.. இவரா?.. இப்படி...: அதிர்ச்சியடைந்த மதுரை
மதுரை:
மதுரையில் இலங்கை மாணவி மயூரணி கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல தொழிலதிபர் சோலைமலைத்தேவர் கைதாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சரவண பவன் அண்ணாச்சி ராஜகோபாலைத் தொடர்ந்து தமிழகத்தின் இன்னொரு தொழிலதிபர் பெண்ணுடன்தொடர்பு, அதனால் ஏற்பட்ட கொலையில் சிக்கியுள்ளார்.
இலங்கை திரிகோணமலையைச் சேர்ந்தவர் மயூரணி. மதுரை அண்ணாநகரில் உள்ள அம்பிகா கலைக்கல்லூரியில் படித்து வந்தார். விடுதியில் தங்கப் பிடிக்காத காரணத்தால், கல்லூரி நிர்வாகி சோலைமலைத் தேவரின்வீட்டின் மாடியில் உள்ள அறையில் தங்கியிருந்தார்.
இந் நிலையில் மயூரணி கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்றதாக மற்றொரு இலங்கை மாணவன் பாலபிரசன்னா, கொலை செய்யக் கூறியதாக சோலமலைத் தேவர், தடயங்களை மறைத்தாக தேவரின் மனைவிராக்கம்மாள் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கெளரவம் போன கதை:
மாணவி கொலை வழக்கில் கைதாகியுள்ள சோலமலைத் தேவர், இலங்கையின் மிகப் பெரும் நகைக் கடைகளில்ஒன்றான அம்பிகா ஜூவல்லர்ஸின் உமையாளர்.
இலங்கை வானொலியில் அப்துல் ஹமீதை வைத்து பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியை நடத்தி தமிழர்கள் மத்தியில்தனது அம்பிகா ஜூவல்லர்ஸை பிரபலமடையச் செயதார்.
டிவி பிரபலமாகாத அந்தக் காலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அம்பிகா ஜூவல்லர்ஸ் வழங்கும்பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி ஒலிபரப்பாகும்போது தமிழக மக்களையும் இலங்கைத் தமிழர்களையும் தங்கள்ரேடியோக்கள் முன் ஆஜராக வைத்தவர் சோலைமலைத் தேவர்.
மதுரையில் தியேட்டர்கள்:
இலங்கையிலிருந்து மதுரை வந்த பிறகு, மதுரை அண்ணா நகரில் அம்பிகா மற்றும் மூகாம்பிகா ஆகிய இருதிரையரங்குகளைக் கட்டினார்.
தமிழகத்தில் நகைக் கடைகள்:
இலங்கையைத் தொடர்ந்து மதுரையிலும் அம்பிகா ஜூவல்லர்ஸ் நகைக் கடையின் கிளையைத் தொடங்கினார்.
பின்னர் சென்னை, திருச்சி என மேலும் சில ஊர்களில் அம்பிகா ஜூவல்லர்ஸ் கிளைகளைத் தொடங்கினார்.
மதுரையில் அம்பிகா கலை மற்றும் அறிவியல் கல்லூரியையும் தொடங்கி நடத்தி வருகிறார்.
மயூரணி ஆடை மாற்றுவதை ரசித்து...
நல்ல செல்வாக்குடனும், புகழுடனும் விளங்கிய சோலமலைத் தேவருக்கு மயூரணி மூலம் பெண் சபலம்ஏற்பட்டுள்ளது. தனது வீட்டு மாடியில் தங்கியிருந்த மயூரணி ஆடை மாற்றிக் கொண்டிருந்ததை தற்செயலாகபார்க்க நேரிட்டதில் இருந்தே அந்தப் பெண் மீது இவருக்கு சபலம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மயூரணி ஆடை மாற்றும் நிகழ்ச்சியை "தற்செயலாக" பார்ப்பதை இவர் வழக்கமாக்கிக் கொண்டார்.
சோலமலைத் தேவரின் செயலைக் கண்டுபிடித்துவிட்ட மயூரணி அவருடன் சண்டை போட்டுள்ளார். பெரியமனிதராக இருந்து கொண்டு இப்படி நடந்து கொண்டு விட்டீர்களே என்று வருத்தப்பட்ட அவர் இலங்கைக்குசென்று விட முடிவு செய்தார்.
மயூரணியால் தனது கெளரவத்திற்கு இழுக்கு வந்து விடுமோ என்ற பீதியில் தான், மாணவர் பால பிரசன்னாவைத்தூண்டி விட்டு அந்தப் பெண்ணைக் கொலை செய்ததாக போலீசாரிடம் தேவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மற்றபடி மயூரணிக்கும் தனக்கும் எந்தவிதமான தொடர்பும் இருக்கவில்லை என்றும், தன்னைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி மயூரணி வற்புறுத்தவில்லை என்றும் தேவர் கூறியுள்ளார்.
சமூகத்தில் நல்ல நிலையில் இருந்தும்,பெண் சபலத்தால் அவமானத்தைத் தேடிக் கொண்டுள்ளவர்களின் பட்டியலில்தற்போது சோலமலைத் தேவரும் இணைந்து விட்டார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications