இந்தியா-பாக். நிலைமை அச்சம் தருகிறது: அமெரிக்கா
வாஷிங்டன்:
இந்தியா- பாகிஸ்தான் இடையே தொடர்ந்து வரும் பதற்றம் பெரும் அச்சத்தைத் தருவதாக அமெரிக்கப் பாதுகாப்புத்துறை துணைஅமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் கூறியுள்ளார்.
இந்திய, பாகிஸ்தான் பிரதமர்கள் சமீபத்தில் தொலைபேசியில் பேச்சு நடத்தியிருந்தாலும் கூட இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம்சிறிதும் குறையவில்லை என அமெரிக்கா கூறியுள்ளது. இரு நாடுகளையும் உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்தச் செய்யும்முயற்சிகளில் அமெரிக்க அதிபர் புஷ் ஈடுபட்டுள்ளார்.
இதற்காக ரிச்சர்ட் ஆர்மிடேஜ் இந்த மாதம் இந்தியா- பாகிஸ்தானுக்கு நாடுகளுக்கு வர உள்ளார்.
இந் நிலையில் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க ராணுவ கல்லூரியில் உரையாற்றிய ஆர்மிடேஜ் கூறியதாவது:
ஆயிரக்கணக்கான மைல் பொது எல்லையைக் கொண்ட இந்தியாவும் பாகிஸ்தானும் 50 ஆண்டுகால பரஸ்பர வெறுப்பிலேயே காலம்தள்ளிவிட்டன. இப்போது இருவரிடமும் அணு ஆயுதங்கள் வேறு உள்ளன. தீவிரவாதமும் உச்சத்தில் உள்ளது. இதனால், இந்தியா-பாகிஸ்தானை நினைத்தாலே அச்சமாக உள்ளது.
வட கொரியாவை ஒரு ராணுவ அடக்குமுறையாளர் ஆண்டு வருகிறார். வெளியுலகே தெரியாத அவர் தனது அணு ஆயுதங்களை வைத்துக்கொண்டு மற்ற நாடுகளை மிரட்டி வருகிறார்.
உலக அளவில் இனியும் அணு ஆயுதங்கள் பரவி விடாமல் தடுத்தே ஆக வேண்டும். அணு, ரசாயன ஆயுதங்கள், ஆயுதம் தயாரிக்கும்தொழில்நுட்பம், யுரேனியம் பரவல் ஆகியவற்றைத் தடுத்தாக வேண்டும் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications