வறண்டது மேட்டூர் அணை: தமிழகத்துடன் பேச்சு நடத்த தயார் என்கிறது கர்நாடகம்
மேட்டூர்:
மேட்டூர் அணை வறண்டு போய்விட்டது. எனவே இந்த ஆண்டு ஜூன் மாதம் 1ம் தேதி விவசாயத்திற்கு தண்ணீர்திறக்கப்படுவதற்கான வாய்ப்பே இல்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆண்டாண்டு காலமாக பாசனத்துக்காக ஜூன் 1ம் தேதி அணை திறக்கப்படுவது வழக்கம்.
இப்போது காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் போதுமான மழை இல்லாமல் போனதாலும், கர்நாடகம் தண்ணீர்கொடுக்க மறுத்துவிட்டதாலும் அணை சுத்தமாக வறண்டு போயுள்ளது.
பொதுப் பணித்துறை தலைமைப் பொறியாளர் மோகனசுந்தரம் தலைமையிலான குழுவினர் மேட்டூர் அணையின்நீர் இருப்பைப் பார்வையிட்டார். பின்னர்செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு ஜூன் 1ம் தேதி தண்ணீர் திறந்துவிடுவதற்கு சாத்தியமே இல்லை.
அணை சுத்தமாக உள்ளது. வெறும் 6 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. இது அணையின் மதகுகள் உயரத்தைக் கூடதொடாது. இதனால் அணையைத் திறந்தாலும் நீர் வெளியே போகாது.
கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற வறட்சியை தமிழகம் கண்டதில்லை. மழை பெய்ய வேண்டிய காலத்தில்பெய்யவில்லை. இதனால், இப்போது கோடை மழையை நம்பியிருக்க வேணடிய நிலைக்கு விவசாயிகள்தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.
கடந்த ஆண்டு கர்நாடகத்தின் வறட்டுப் பிடிவாதம் காரணமாக, குறுவை சாகுபடி சுத்தமாக பாதிக்கப்பட்டது. சம்பாசாகுபடியும் நடக்கவில்லை. இதனால் எலி தின்னும் நிலைமைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.
அதே நிலை இந்த ஆண்டும் ஏற்பட்டு விடுமோ என்று விவசாயிகள் பெரும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.
பேச்சு நடத்தத் தயார்: கர்நாடகம்
இந் நிலையில் தமிழகத்துடன் காவிரிப் பிரச்சனை குறித்து பேச்சு நடத்த தயாராக இருப்பதாக கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.
இன்று தனது 71வது பிறந்தநாளையொட்டி அவர் நேற்று திருப்பதி கோவிலுக்கு வந்தார். தமிழகம் தவிர ஆந்திரம், மகாராஷ்டிரத்துடனும் கர்நாடகத்துக்குநதி நீர் பகிர்வு பிரச்சனை உள்ளது.
இப்போது ஆந்திராவுக்கும் கர்நாடகத்துக்கும் இடையே அலமாத்தி அணைக் கட்டு தொடர்பாக கடும் மோதல் எழுந்துள்ளது. இந் நிலையில் திருப்பதி வந்தஎஸ்.எம்.கிருஷ்ணா நிருபர்களிடம் பேசுகையில்,
நீதிமன்றங்கள், நடுவர் மன்றங்களுக்கு வெளியிலேயே நதி நீர் பகிர்வு பிரச்சனைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். இதை தமிழக, ஆந்திர மாநிலங்களிடம்ஏற்கனவே நாங்கள் தெளிவாக்கிவிட்டோம்.
வீரப்பன்:
வரும் நாட்களில் வீரப்பன் எப்போது வேண்டுமானாலும் பிடிபடலாம். அவனை அதிரடிப்படையினர் நாளுக்கு நாள் நெருங்கி வருகின்றனர் என்றார் கிருஷ்ணா.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications