மயிலாடுதுறையில் காங். விவசாய செயலாளர் வெட்டிப் படுகொலை
மயிலாடுதுறை:
தமிழக காங்கிரஸின் விவசாயப் பிரிவு செயலாளரான குரு ஞானசேகரன் அரிவாளால் வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டார்.
நேற்று இரவு குரு ஞானசேகரன் தன் காரில் ஏறிக் கொண்டிருந்தார். அப்போது காரின் பின்னே மறைந்திருந்த ஒருகும்பல் திடீரென்று அவர் மீது நாட்டு வெடிகுண்டுகளை எறிந்தது.
பின்னர் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் காரின் பின்னாலிருந்து வெளிப்பட்டு அவரை நோக்கிப் பாய்ந்தனர்.அவர்களுடைய கையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கரமான ஆயுதங்கள் இருந்தன.
அவர்களைப் பார்த்ததும் குரு ஞானசேகரன் தப்பி ஓட முயற்சித்தார். ஆனால் உடனே சுற்றி வளைத்த அந்தக்கும்பல் அவரைச் சராமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துச் சாய்ந்தார்.
அவருடன் வந்த அவருடைய உதவியாளருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இருவரும் கீழே சரிந்ததும்அவர்களைத் தாக்கியவர்கள் இருளில் தப்பி ஓடி விட்டனர்.
சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது குரு ஞானசேகரனும் அவருடையஉதவியாளரும் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ந்தனர்.
இதையடுத்து இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் குரு ஞானசேகரன்வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய உதவியாளர் வெட்டுக் காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்தப் படுகொலைச் சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications