துருக்கியில் பயங்கர பூகம்பம்: 200 பேர் பலி- 140 குழந்தைகள் புதையுண்டனர்?
இஸ்தான்புல்:
துருக்கியை இன்று பயங்கர பூகம்பம் தாக்கியது. இதில் சுமார் 200 பேர் பலியாகியுள்ளனர். பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 140குழந்தைகள் இடிபாடுகளில் சிக்கிக் கிடக்கின்றனர்.
துருக்கியின் கிழக்குப் பகுதியை இன்று அதிகாலை 3.27 மணிக்கு (இந்திய நேரப்படி காலை 6 மணி) நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவுகோளில் 6.4 என்ற அளவுக்குப் பதிவான இந்த நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாயின. இதில் 200பலியாகிவிட்டதாகவும் 500 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந் நாட்டு நகர்ப்புற அமைச்சர் செகி எர்கேசென் கூறினார்.பலியானவர்களின் எண்ணிக்கை மேலும அதிகமாக இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
செல்டிக்சுயுயா என்ற இடத்தில் ஒரு ஆரம்பப் பள்ளியின் 4 மாடி விடுதிக் கட்டடம் இடித்து விழுந்தது. இதில் 195 குழந்தைகள் சிக்கிக்கொண்டனர். இவர்களில் 55 குழந்தைகள் கட்டட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுவிட்டனர்.
மற்றவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்தக் குழந்தைகளில் எத்தனை பேர் பலியானார்கள், எத்தனைப் பேர்தப்பியுள்ளனர் என்று தெரியவில்லை. அவர்கள் உயிரோடு புதையுண்டு போயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
துருக்கின் பல பகுதிகளிலும் இந்தப் பூகம்பத்தை உணர முடிந்தது. இந்த பூகம்பத்தைத் தொடர்ந்து சிறிய அளவில் நில நடுக்கங்கள்தொடர்ந்து கொண்டுள்ளன.
துருக்கி நாட்டை அடிக்கடி பூகம்கம் தாக்கி வருகிறது. 1991ம் ஆண்டில் இந் நாட்டின் வட மேற்குப் பகுதியில் ஏற்பட்ட மிக பயங்கரபூகம்பத்தில் லட்சக்கணக்கானவர்கள் பலியாயினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications