ஊமை சிறுமி தூக்குப் போட்டு தற்கொலை
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டத்தில் தனது வீடு சூறையாடப்படுவதைப் பார்த்து மனம் உடைந்த, வாய் பேச முடியாதஊமைச் சிறுமி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.
கன்னியாகுமரி மாவட்டம் கூட்டுமங்கலம் கிராமத்தில் இந்த சோகம் நடந்தது. இந்த கிராமத்தைச் சேர்ந்தஅமிர்தமணி 2 ஆண்டுகளுக்கு முன் கிருஷ்ணன் பிள்ளை என்பவரிடம் ரூ.50,000 கடன் வாங்கியிருந்தார்.கடனுக்காகத் தனது வீடு மற்றும் காலிமனையை அவரிடம் அடகு வைத்திருந்தார்.
அமிர்தமணியால் கடன் பணத்தை திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதனையடுத்து, கிருஷ்ணன் பிள்ளைஅடியாட்களுடன் அமிர்தமணி வீட்டுக்கு வந்தார்.
வீட்டில் உள்ள பொருட்களை அள்ளி வெளியே எறிந்தனர். எப்படியாவது பணத்தைத் தந்துவிடுவதாகவும் வீட்டைசூறையாட வேண்டாம் என்றும் அமிர்தமணி கதறித் துடித்தார். கிருஷ்ணப் பிள்ளையின் காலில் விழுந்து அழுதார்.
ஆனால், அவரை அடித்து வெளியே தூக்கி எறிந்தது அந்தக் கும்பல். தொடர்ந்து வீட்டில் இருந்த பொருட்களைஎல்லாம் வெளியே வீசியது.
பின்னர் வீட்டையும் இடித்துத் தள்ளினர்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அமிர்தமணியின் வாய் பேச முடியாத மகள் கடும் அதிர்ச்சி அடைந்தாள்.சத்தமிட்டு அழக் கூட முடியாத நிலையில் ஓரமாய் நின்று அழுது கொண்டிருந்தாள். தனது தந்தைஅடிக்கப்பட்டதையும், வீடு உடைக்கப்பட்டதையும், பொருள்கள் சூறையாடப்பட்டதையும் நேரில் பார்த்த அந்தச்சிறுமி அதிர்ச்சியில் உறைந்து போனாள்.
கிருஷ்ணன் பிள்ளையும் அவருடைய அடியாட்களும் அங்கிருந்து சென்ற பின்னர் வீட்டில் தனியாக இருந்த அவள்தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.
இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து கிருஷ்ணன் பிள்ளையைக் போலீசார் கைது செய்துள்ளனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications