மத்திய அரசு ரூ.2,500 கோடி அளித்தால்தான் தமிழகத்தில் மதிப்பு கூட்டு வரி: ஜெ.
சென்னை:
மதிப்புக் கூட்டு வரி விதிப்பை அமல்படுத்தினால் ஏற்படும் ரூ.2,500 கோடி இழப்பை மத்திய அரசு சரிக்கட்டினால்மட்டுமே அதை தமிழகத்தில் அமல்படுத்த தயாராக இருப்பதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சட்டசபையில் வணிக வரித் துறைக்கான மானியக் கோரிக்கை தொடர்பான விவாதம் நேற்று நடந்தது. அப்போதுமதிப்புக் கூட்டு வரி விதிப்பு தொடர்பாக பா.ஜ.க. உறுப்பினர் லட்சுமணன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஜெயலலிதா பதிலளித்துப் பேசுகையில், மதிப்புக் கூட்டு வரி விதிப்பை அமல்படுத்தினால் தமிழகத்திற்குரூ.2,500 கோடி இழப்பு ஏற்படும்.
மதிப்புக் கூட்டு வரியை அமல்படுத்தும்போது மாநில அரசுக்கு ஏற்படும் இழப்பை நிரந்தரமாக ஈடுகட்டுவோம்என்று மத்திய அரசு உறுதியாகக் கூறவில்லை. முதல் ஆண்டில் மட்டுமே முழுமையான நஷ்ட ஈடு தரப்படும் என்றுகூறியுள்ளது மத்திய அரசு.
2ஆம் ஆண்டு அதைக் குறைத்து விட்டு, 3ம் ஆண்டு அதை இன்னும் குறைத்து பின்னர் நிறுத்தியே விடுவார்களாம்.இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
சிரமம் இல்லாமலும் பிரச்சனை ஏதும் இல்லாமலும் மதிப்புக் கூட்டு வரியை அமல்படுத்த முடியாது.
இதை அமல்படுத்துவதால் தமிழகத்துக்கு ஏற்படும் ரூ.2,500 கோடி இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு முன்வந்தால்மட்டுமே உடனடியாக அந்த வரி விதிப்பை அமல்படுத்த தமிழக அரசு தயாராக உள்ளது.
இல்லாவிட்டால் தமிழகத்தில் மதிப்புக் கூட்டு வரியை அமல்படுத்த முடியாது என்று கூறினார் ஜெயலலிதா.
-->
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications