ஏர்-இந்தியா விமானிகள் போராட்டம் வாபஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

சார்ஸ் விவகாரம் காரணமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஏர்-இந்தியா நிறுவன பைலட்டுகள் தங்கள்போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டு பணிக்குத் திரும்பியுள்ளனர்.

முதலில் சார்ஸ் தாக்குதல் உள்ள நாடுகளுக்கு விமானங்களை இயக்க அவர்கள் மறுத்தனர். அதை மத்திய அரசுஏற்றுக் கொண்டு சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்களை காலவரையின்றி ரத்து செய்தது.

ஆனால், தங்களுடன் விமானத்தில் வரும் ஏர்-ஹோஸ்டஸ் உள்ளிட்ட ஊழியர்களும் சார்ஸ் தாக்குதல் உள்ளநாடுகளுக்கு பயணம் செய்யாதவர்களாக இருக்க வேண்டும், அவர்கள் அந்த நாடுகளுக்குச் செல்லவில்லை என்றகடிதத்துடன் தான் விமானத்தில் ஏற வேண்டும் என பைலட்கள் திடீர் நிபந்தனை விதித்தனர்.

இதை மத்திய அரசு ஏற்க மறுத்தது. இதனால் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பைலட்கள் விமானங்கள்வெளிநாடுகளிலேயே விட்டுவிட்டு வந்தனர். இதனால் கடுப்பாகிப் போன மத்திய விமானத்துறை அமைச்சர்ஷானவாஸ் ஹூசேன் இந்த விமானிகளை சஸ்பெண்ட் செய்தார்.

சுமார் 45 விமானிகள் வரை வேலையில் இருந்து தாற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர். 12 பேர் மீது குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் விமானிகள் சங்கத்துக்குத் தரப்பட்ட அங்கீகாரத்தையும் மத்தியஅரசு ரத்து செய்தது.

இவர்களுக்குப் பதிலாக ஓய்வுபெற்ற விமானிகளையும், பிற விமான நிறுவன விமானிகளையும் கொண்டுஏர்-இந்திய விமானங்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்தது. மத்திய அரசின் முடிவை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் பைலட்கள் சங்கம் வழக்குப் போட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் பைலட்கள் சங்கத்தினரை தொழிலாளர் நலத்துறை அமைச்சர்சாகிப் சிங் வர்மா அழைத்துப் பேசினார். இதையடுத்து தங்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக பைலட்கள்அறிவித்தனர். நேற்றிரவு போராட்டத்தை நிறுத்திக் கொண்ட அவர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்பினர்.

நாட்டு நலன் கருதியே போராட்டத்தைக் கைவிடுவதாக பைலட்கள் அறிவித்துள்ளனர்.

இருப்பினும் ஏர்-இந்தியாவின் விமான சேவை மீண்டும் சரியாக ஒரு வாரகாலமாகும் என விமானப்போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. பல விமானங்கள் வெளிநாடுகளில் நிற்கின்றன.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+