அயோத்தி: நிலத்தை தோண்ட மேலும் 35 நாள் அவகாசம்
லக்னோ:
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் இருந்ததா என்பதைக் கண்டறிவதற்காகநடைபெறும் அகழ்வாராய்ச்சிப் பணிகளை முடிப்பதற்கு மேலும் 35 நாட்கள் கால அவகாசம்அளிக்கப்பட்டுள்ளது.
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சுதிர் நரெய்ன், நீதிபதி அலாம் மற்றும் நீதிபதி பன்வர் சிங்ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் இருந்ததாக என்பதைக் கண்டறிவதற்காகநிலத்தைத் தோண்டிப் பார்க்குமாறு மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் 5ம் தேதிஉத்தரவிட்டது. ஒரு மாதத்திற்குள் இந்தப் பணியை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து மார்ச் 10ம் தேதி மத்திய தொல்பொருள் துறையினர் அயோத்தியில் தோண்டும்பணிகளைத் தொடங்கினர். பழங்கால அடுப்பு, சங்கு, மட்பாண்டங்கள், "அல்லா" என்று பெயர்பொறிக்கப்பட்ட கல் உள்பட பல பொருட்கள் தோண்டும்போது கிடைத்தன.
ஒரு மாத கால அவகாசம் முடிந்த நிலையில் மே 10ம் தேதி வரை அலகாபாத் உயர் நீதிமன்றம்நிலத்தைத் தோண்டி ஆராய்வதற்கான காலக் கெடுவை நீட்டித்தது.
இந்நிலையில் இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், அயோத்தி நிலத்தைத் தோண்டி ஆராயும்பணிகளை வரும் ஜூன் 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் ஜூன் 30ம் தேதிக்குள் தொல்பொருள் துறையினர் தங்களுடைய இறுதி அறிக்கையைத்தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதைத் தவிர, தோண்டப்பட்ட பகுதிகளில் மழை நீர் போன்றவை இறங்கி விடாதவாறுபிரம்மாண்டமான டெண்ட்டுகளைக் கொண்டு அனைத்துப் பகுதிகளையும் மூட வேண்டும் என்றும்நீதிபதிகள் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இதையடுத்து இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications