பொதுமக்கள் மீது வெடிகுண்டு வீசிய விடுதலை சிறுத்தைகள் பிரமுகர்
சென்னை:
பொதுமக்கள் மீது நாட்டு வெடிகுண்டை வீசி 2 பேரைக் காயப்படுத்திய விடுதலைச் சிறுத்தைகள்அமைப்பின் மாநில இணை பொதுச் செயலாளர் செல்வம் மற்றும் அவரது டிரைவர் பழனிவேல்ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை திருவான்மியூரில் இந்த பரபரப்பு சம்பவம் நடந்தது. திருவான்மியூரில் உள்ள கக்கன்காலனிக்கு செல்வம் காரில் வந்துள்ளார். காரை பழனிவேல் ஓட்டியுள்ளார். படுவேகமாக காரைஓட்டிவந்த பழனிவேல், கக்கன் காலனியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு முன்பாக வந்துநிறுத்தியுள்ளார்.
அப்போது ஹோட்டலுக்கு முன்பாக பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த நந்தகுமார் என்ற பேன்சிகடை அதிபர் படுவேகமாக வந்து நின்ற காரைப் பார்த்து பயந்து போய் விலகி ஓடினார்.
பின்னர் கார் நின்றதும், "இவ்வளவு வேகமாக வருகிறீர்களே, மோதியிருந்தால் என் உயிர்போயிருக்குமே" என்று காரில் உள்ளவர்களிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்தபழனிவேல் மற்றும் செல்வம் இருவரும் காரை விட்டு இறங்கி நந்தகுமாரை அடிக்க முயன்றனர்.
இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் நந்தகுமாருக்கு ஆதரவாக கூடினர். கூட்டம்சேருவதைப் பார்த்த பழனிவேல், காருக்குள் இருந்த நாட்டு வெடிகுண்டை எடுத்து பொதுமக்கள்மீது வீசியுள்ளார். செல்வமும் ஒரு குண்டை எடுத்து வீசியுள்ளார்.
இதில் நந்தகுமாரும், இன்னொருவரும் படுகாயடைந்தனர். வெடிகுண்டுகள் வீசப்பட்டதால்,அப்பகுதியில் உள்ள மக்கள் சிதறி ஓடினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே போலீஸாருக்கும் தகவல்கள் பறந்தன. வெடிகுண்டுகளை வீசி விட்டுத் தப்ப முயன்றபழனிவேல் மற்றும் செல்வம் ஆகிய இருவரையும் போலீஸார் விரைந்து சென்று கைது செய்தனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications