காவிரி: கிருஷ்ணாவுடன் ஜெ. பேச்சு நடத்த இ.கம்யூ. யோசனை
திருச்சி:
காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதாபேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார்.
நேற்று திருப்பதியில் நிருபர்களிடம் பேசிய கிருஷ்ணா, நீதிமன்றங்கள், நடுவர் மன்றங்களுக்குவெளியே நதி நீர் பகிர்வு பிரச்சனைகள் தொடர்பாகப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறினார்.
இந்நிலையில் இது தொடர்பாக திருச்சியில் நிருபர்களிடம் நல்லக்கண்ணு பேசுகையில்,
காவிரி விவகாரம் தொடர்பாகப் பேச்சு நடத்தத் தயார் என்று கிருஷ்ணா கூறியுள்ளார். இந்தவாய்ப்பை ஜெயலலிதா பயன்படுத்திக் கொண்டு காவிரி பிரச்சனையைத் தீர்க்க முயற்சிக்கவேண்டும். இதனால் தமிழக விவசாயிகளுக்குப் பலன் கிடைக்கும் என்றால் இந்தப்பேச்சுவார்த்தையை ஏற்றுக் கொள்வதில் தவறே இல்லை.
தமிழகத்தில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.பெண்கள் பகல் நேரத்தில் கூட வீட்டில் தனியாக இருக்க முடியாத ஒரு சூழ்நிலை தமிழகத்தில்ஏற்பட்டுள்ளது.
எனவே கொலை, கொள்ளைச் சம்பவங்களைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளைத்தமிழக அரசு எடுக்க வேண்டும். குறிப்பாக, மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் சாதாரண பிரச்சனைகளைக் கூட சட்டசபையில் ஊதிப் பெரிதாக்கி வருகிறார் ஜெயலலிதா.ஹிந்து மற்றும் முரசொலி பத்திரிக்கைகள் மீதும், "நக்கீரன்" ஆசிரியர் கோபால் மீதும் எடுக்கப்படும்நடவடிக்கைகள் பத்திரிக்கை சுதந்திரம் மற்றும் பேச்சுரிமையை நசுக்கும் செயல்களாகும்.பத்திரிக்கைகள் மீது அடக்குமுறையைக் கையாள நினைப்பது நல்லதல்ல.
சங் பரிவார் அமைப்புகளுடன் மத்திய அரசு பேச்சு நடத்திக் கொண்டிருக்கிறது. இதனால் மத்தியபா.ஜ.க. அரசு இன்னும் மத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டுள்ளது உறுதியாகிறது. எனவேமத்தியக் கூட்டணியிலிருந்து திமுக, மதிமுக போன்ற கட்சிகள் உடனடியாக வெளியேற வேண்டும்.அதுதான் ஜனநாயகத்திற்கு நல்லது என்றார் நல்லக்கண்ணு.
-->


Click it and Unblock the Notifications
